90-களின் வாழ்க்கை
வரிசையாய் திண்ணையில் அமர்ந்து பேசி பழகி விளையாடி மகிழ்ந்த எங்களுக்கு வாட்ஸ்அப் என்றும் தேவை பட்டதில்லை...
ஒற்றுமையாய் அமர்ந்து கூட்டாஞ்சோறு ஆக்கி ருசி பார்த்து உண்டு மகிழ்ந்த நாங்கள் சுவிக்கி சொமாட்டோவை
தேடியதில்லை...
ஏசி தியேட்டரை தேடியதில்லை என்றும்...
மாறாய் மரத்தடியில் திரையில் ஓட்டிய படமே எங்களை மகிழ செய்தது...
மாலை நேரத்தில் மரத்தின் அடியில்...
கூடி விளையாடிய நாங்கள்..
பன்சிட்டி ஏதும் பார்த்ததில்லை..
உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும்..
மதிப்பளித்த எங்களுக்குள் ஒற்றுமை என்றும் ஓங்கியே நின்றது...
கரைந்து காணாமல் கனவாய் போன அந்த கால நாட்களை எண்ணியே எங்குகிறது மனம்...
மீண்டும் ஒருமுறை ரசிக்க...