அவள் நான் நிலவு

தொடுவனமும் இங்கே
நிர்வாணமாய் நடைபோடுகிறது
அவள் காலடி தடங்களை
கடற்கரையில் பின்தொடர்ந்தபடி

முழு இரவும் இன்று
மூச்சுமுட்டுகிறது பௌர்ணமி
நிலவாய் அவள் ஆடை அணியாத
நிகழ்வை உள்வாங்கியபடி

இடையிடையே தொடரும்
ஏக்கங்களையும் நீளும் பெருமூச்சையும்
அடக்கி கொள்ள முடியாமல்
நீரோட்டத்தில் தள்ளாடுகிறது
கப்பலும் நிலவான அவளை ரசித்தபடி

தூங்கும்முன் பாலாடை
விலகிய நிலவின் தரிசனம்
தாராளம் என கவிதை படித்தபடி
சாமக்கோழியும் கூவிக்கொண்டிருக்கிறது
கண்விழிக்காமல் நிலவில் ஒளிர்ந்தபடி

என்றும் கற்பனைகளின்
எல்லையாய் நிலவும் அவளும்
மாறிமாறி அழகை கடைவிரிக்க
ஆடைகளின் மறைவிலிருந்து
நிர்வாணமாய் வெளிப்படவே
விரும்புகிறது அமாவாசையும்
துணிச்சலை வரவழைத்தபடி.....!!
துணிச்சலை வரவழைத்தபடி.....!!!

எழுதியவர் : மேகலை (26-Jul-19, 9:14 am)
சேர்த்தது : மேகலை
Tanglish : aval thaan nilavu
பார்வை : 241

மேலே