கிருஷ்ணப்பருந்து ------மோகன்லால் நடிக்க வின்ஸெண்ட் இயக்கத்தில் சினிமா---------- திரைக்கதையில் ஒரு பாடல் இன்னும் நினைவில் உள்ளது நிலாவின்றே பூங்காற்றில்…

நிலாவின்றே பூங்காவில் நிஸாபுஷ்ப கந்தம்

கினாவின்றே தேன்மாவில் ராப்பாடி பாடி



கரிமுகில் என் பூவேணி இளம் காற்று என் மதுவாணி

மதிமுகம் என் தாம்பாளம் மலர்ச் சுண்டு என் தாம்பூலம்

தளிர்வெற்றில முறுக்கானும் மணிமாறில் வீழானும்

பகரான் நீ வந்நாட்டே ஆ சூடு பகர்ந்நாட்டே



வெண்ண தோல்கும் என் மேனி முறுகே ஒந்நு புணரானும்

என்மடியில் தலசாய்க்கானும் சுமபாணன் வந்நல்லோ

ஈ ராத்ரி சிவராத்ரி மதிரோத்ஸ்வ சுபராத்ரி

மதனா நீ வந்நாட்டே மார்ச்சூடு பகர்ந்நாட்டே



[தமிழில்]

நிலவின் பூங்காவில் இரவுமலர்களின் மணம்

கனவின் தேன்மாமரத்தில் இரவுப்பறவை பாடியது



கார்முகில் என் பூங்கூந்தல் இளங்காற்று என் தேன்குரல்

மதிமுகம் என் தாம்பாளம் மலருதடுகள் என் தாம்பூலம்

தளிர்வெற்றிலை போடுவதற்கும் மணிமார்பில் வீழ்வதற்கும்

பரிமாற நீ வருவாயா அந்த வெம்மையை பகிர்வாயா?



வெண்ணையை வெல்லும் என் மேனியை இறுக ஒருமுறை தழுவ

என் மடியில் தலைசாய்க்க மலரம்பு கொண்டவன் வந்தாயே

இவ்விரவு விடியாது. பூகொண்ட கோழிகள் கூவப்போவதில்லை.

இந்த ராத்திரி சிவராத்திரி காமத்திருவிழாவின் நல்லிரவு

மன்மதனே வருக மார்பின் வெம்மை பகிர்க

எழுதியவர் : ஜெ மின்னஞ்சல் (26-Jul-19, 4:28 pm)
பார்வை : 49

மேலே