சில உறவுகளை

உள்ளம் விரும்பும் உறவுகளிடம்
நெருங்கி பழக நினைத்தாலே
நெஞ்சோரத்தில் பயமொன்று
நெருப்பாய் சுட்டெரிக்கிறது!
பிரிவென்ற இறையை கொத்த
விதியென்ற பறவை
வாழ்க்கையென்ற வானில்
சுற்றித் திரிகிறது -- அதனாலே
அன்பானவர்களிடம்
அளவாக பேசி
ஆதரவை பூசி
கைவிடக் கூடாதென்று
கண்ணோரம் கண்ணீர் வந்தாலும்
கவனமாக காவல் காத்து வருகிறேன்
சில உறவுகளை...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (26-Jul-19, 7:58 pm)
Tanglish : sila uravugalai
பார்வை : 957

மேலே