அண்ணன்

சின்ன சண்டைகள்!
செல்ல கோபங்கள்!
சிலமுறை அடிகள்!
பலமுறை ஆட்டங்கள்!
வரைமுறையில்லா சேட்டைகள்!
வரைமுறை தாண்டிய நேசங்கள்!

சும்மா சீண்டினாலும்,
சுண்டிய என் முகம் காண்கையில்
விழிவெள்ளம் கொள்ளுமே
என் அண்ணனுக்கு !
என் சொந்ததுக்கு!

அண்ணனாய் அமைந்து
தோழனாய் விளைந்து
அரணாய் காத்து
அன்பாய் பார்த்து
சேவகனாய் எனக்காக வாழ்ந்து
வேந்தனாய் - என் உயிரில்
மனதில் நிலைத்தாயே
என் அன்பு அண்ணா!

எழுதியவர் : Sara Tamil (27-Jul-19, 12:18 am)
சேர்த்தது : Sara Tamil
Tanglish : annan
பார்வை : 130

மேலே