சோகங்கள் சில சுகங்கள் பல

சிறு வயதுகளில்...
இனிப்புகள் பிடித்தது...
இனிப்பாய் வாழவும் பிடித்தது...
கனவுகள் பிடித்தது...
கற்பனைகளும் பிடித்தது...

ஆண்பால் பெண்பால்
வித்தியாசம் தெரியாமல்
பள்ளிக்கூட நண்பர்களிடம்
பழகப் பிடித்தது...
பதினான்கு வயதில்
வித்தியாசம் தெரிந்த
பிறகும் அது பிடித்தது...
ஆட்களின் வர்ணங்கள் பிடித்தது...
ஆடைகளின் வர்ணங்களும் பிடித்தது...
காகிதங்கள் சொன்ன
கவிதைகள் பிடித்தது...
கண்கள் சொன்ன
கவிதைகளும் பிடித்தது...
அது எதுவும் காவியங்கள்
ஆகாததும் பிடித்தது...

அன்றைய நிகழ்காலத்தின்
நிஜங்கள் பல அன்றைய
நிகழ்காலத்தில் பிடித்திருக்க
எதிர்கால ஆசைகளுக்கும்
மனதில் இடம் ஒதுக்கப்பட்டது...

அந்த கற்பனைகள்
சுயம்பு ஆனவை.. சுயமானவை..
எல்லாம் சுகமானவை...
பகிரப் பதமானவை..
ரசிக்க இதமானவை...

நல்ல வீட்டில் வாழ்ந்திருக்க
நல்ல கல்லூரியில் படித்திருக்க
தானியங்கி இருசக்கர
வாகனம் வைத்திருக்க
மனம்கவர் ஆடை அணிந்திருக்க
நல்ல வேலையில் அமர்ந்திருக்க
மனமொத்த மயிலாளுடன்
இல்லறம் இணைந்திருக்க
வான்வழிப் பயணம்
கை கூடி இருக்க...
இன்னும் எத்தனையோ
ஆசைகள் நிஜமாகியது...

சோகங்கள் சில
சொல்லாமல் வந்தது...
சுகங்கள் பல
சொல்லிவிட்டு வந்தது... அதை
இன்றைய நவீனகாலம்
தாராளமாய்த் தந்தது...

தொலைக்காட்சிப் பெட்டி
குளிர் சாதனைப் பெட்டி
மேஜைக்கணினி.. மடிக்கணினி
ஃபேஸ்புக்.. இமெயில்
தொடுதிரை கைபேசி
அதில் வாட்ஸ்அப் செயலியில்
உரையாடல்.. இன்னும் பல...

நானா சேராமல்
தானா சேர்ந்த வாட்ஸ்அப்
குழுக்களுக்கும் குழுக்களின்
அட்மின்களுக்கும் நன்றி...
சூடான தண்ணீரில்
கிருமிகள் செத்துப்போகிறது..
சூடான வாதங்களில்
பொய்மைகள் தோற்றுப்போகிறது...
குளிரான வாதங்களில்
கிருமிகள் இருப்பதே இல்லை...

அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்.
😀👍🙏

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (28-Jul-19, 10:59 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 655

மேலே