நட்பு

நட்பு 💪

காலத்தால் கரைந்து விடும் உறவுகள் பல இருக்க
காலத்தால் மறக்கப்படும்
புகழ் பல இருக்க
காலத்தால் மறைந்து விடும் மனிதர்கள் பல இருக்க
நண்பர்கள் நாங்கள் உயிர் நீத்த பிறகும் இந்த காலம் எங்களை மறக்காது, மறைக்காது.
அதோ அந்த மலை எங்கிலும் எங்கள் சிரிப்பொலி எதிரொலிக்கும்.
இதோ இந்த கடல் அலைகள் எங்கள் கால்களுக்கு ஏங்கும்.
அதோ வண்ண மலர் கூட்டம் எங்கள் வருகையை எதிர்நோக்கும்
அதோ அந்த ஏழை அன்னை எங்கள் பெயரை அவள் பிள்ளைகளுக்கு பெயராக சூட்டி பெருமைபடுவாள்.
பல நூல்கள் வரலாம்
ஆனால் திருக்குறள்
வானம், பூமி இருக்கும்
வரை நிலைத்து நிற்கும்
மானுட உறவில் 'நட்பும்'
அந்த சூரியன் போல் என்றும் ஒளி கொடுக்கும்.
மானுடத்தை மகிழ்ச்சி படுத்தும்.
- பாலு.

எழுதியவர் : பாலு (29-Jul-19, 3:03 pm)
Tanglish : natpu
பார்வை : 1996

மேலே