பெண்ணே எழு

°°பெண்ணே எழு°°
~~~~~~~~~~~~~~~
எட்டாம் வகுப்பு படித்து கொண் டிருந்தான் குமரேசன், கோகிலாவும் அவன் கூடவே படிப்பவள் மதிய உணவிற்காக பள்ளிக்கூடம் விட்டது

பள்ளிக்கூடம் பக்கத்தில் ஒரு சிறிய குளம் அக்குளக்கரையில் குமரேசனின் தாய் ஜல்லி கல் உடைத்து க்கொண்டிருந்தாள்
குமரனுக்கும் தனக்கும் கஞ்சியோ கூழோ கொண்டுவந்து ஒரு மரக்கிளை யில் கட்டி தொங்கவைத்திருப்பாள் குமரேசன் மதிய உணவுக்கு தினம் அங்கே வருவான் தாயும் மகனும் சேர்த்து உண்பார்கள் அதன்பிறகு பள்ளிக்கூடம் வந்து விடுவான்

கூடப்படிக்கும் பெண்பிள்ளைகள் ஏழெட்டுபேர் அக் குளக்கரையில் உள்ள ஆலமரத்தடி நிழலில் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம்

குமரேசன் குளத்திற்கு பக்கத்தில் அம்மா இருக்கும் இடத்திற்கு போவதை பார்த்து கோகிலா இவன் இங்கே எங்கே போகிறான் என்று அவனுக்கு தெரியாமல் பின் தொடர்ந்து கவணித்தாள்

குமரேசனின் தாய் மகன் வருவதை கண்டுக்கொண்டு எழுந்து போய் மரக்கிளையில் கட்டி தொங்க வைத்திருந்த மண் கலையத்தில் இருந்த கஞ்சியை ஊற்றி கொடுத்து சின்ன வெங்காயம் கடிபானுக்கு இருவரும் சேர்ந்து குடிப்பதை கவனித்தாள் அவளுக்கு பார்க்க பரிதாபமாக இருந்தது கண் கலங்கிற்று

கோகிலா வசதியானவள் சிலர் வசதியற்றவர்களை கண்டால் ஏளனமாக பார்ப்பார்கள் சிலர் அவர்களைக்கண்டால் தீண்டத்தகாதவர்களைப்போல் விலகி செல்வர் அதுபோன்ற அறிகுறி அறவேயில்லை அவளிடம்

அவன் மேல் அவளுக்கு இரக்கம் பிறந்தது அதை காதல் என்று சொன்னால் தப்பாகிவிடும் அன்றையிலிருந்து அவளையறியாமலேயே அவன் மேல் கவணம் செலுத்த லானாள்

தாம் நேரடியாக பேச்சு கொடுக்க தயக்கம் இனம் கூறவியலா ஏதோ ஒன்று இடைமறித்து இருந்தது அவனுக்கு ஒருசில புத்தகம் வாங்க முடியாத சூழல், மாண வர்களிடம் கெஞ்சிக் கேட்டு அந்த பாடத்தை அப்படியே நோட்டு புத்தகத்தில் எழுதிக் கொண்டு விடுவான் அதை கவணித்த கோகிலா புத்தகத்தை புதியதாக வாங்கி வந்து அவளாக கொடுத்தால் வாங்குவானொ இல்லை மறுப்பானோ என்ற சந்தேகத்தால் தன் வாத்தியாயர் மூலமாக அவனுக்கு கொடுக்க வைத்தாள்

இப்படியாக காலம் ஓடியது கல்லூரி படி ஏறினார்கள் அங்கேயும் அவளது பணிவிடைகள் தொடர்ந்தது ஆனாலும் ஒருவரை ஒருவர் நெருங்கிக் கொள்ளும் சந்தர்ப்பம் அவர்களை விட்டு விலகியே இருந்தது

குமரேசன் அவள் எங்கே அவள் எதிரில் நான் எங்கே என்ற தாழ்மை குணம் அவனை அவளிடம் இருந்து வேலி போட்டு வைத்து இருந்தது

பொதுவாக அவளைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால் சாமுத்திரிகா லட்சணத்தை உடையவள் இவை எல்லா பெண்களுக்கும் அமைவது கடிணத்திலும் கடிணம் அந்த வரத்தை அவள் பெற்றிருந்தாள் என்றே சொல்லலாம்

மேலே மேலே வளர்ந்து போகப்போக அவளின் அழகு கூடிக்கொண்டே போனதேயன்றி குறைந்த பாடில்லை அவளை திரும்பி பார்க்காத கண்கள் பொட்டக்கண்ணாகத்தான் இருக்கும்

கோர முடி குடியைக் கெடுக்கும் சுருட்டை முடி சோறு போடும் என்று சொல்வதுண்டு கோகிலா என்ற பெயரில் நிறையபேர் இருக்கிறார்கள் யாராவது கோகிலா வீடு எந்த வீடுங்க என்று கேட்டால் எளிதில் சொல்லிவிட முடியாது சுருட்டை முடி கோகிலா என்றால் தான் சிலருக்கு சட்டென கூற முடிகிறது

அவள் வரும் போதும் போகும்போதும் அவள்மேல் செயற்கை நறுமணத்தை தெளித்து கொள்ளாமலே இயற்கை யாகவே கவர்ந்திழுக்கும் நறுமணம் வீசும்

மாணவர்கள் அவள் மீது நட்பு வைத்துக்கொள்ள துடியாய் துடிப்பார்கள் அது புஸ்வானம் ஆகிவிடும் ○○ஒரு பெண்ணை சிநேகிதம் பண்ணிக்கொள்ள முடியாதவன் நீயெல்லாம் எதற்கு பிறந்தாய் பூமிக்கு பாரமாக எவள நெருங்கினாலும் ஒதுக்குறாளுங்க ஒரு ஓரமா ○○என்று கண்ணாடி முன்னாடி நின்று அவர்களையே கேட்டு காரி கண்ணாடியில் துப்பிக் கொள்வார்கள்

அந்த அளவுக்கு கவர்ந்திழுக்கும் அவளின் சாந்த குணம் அனாவசியமாக யாரிடமும் பேசமாட்டாள் சிரிக்கமாட்டாள் ஆனாலும் அவள் முகம் சிரிக்கும் முகத்தை போலவே இருக்கும்

அப்படிப்பட்பவள் ஒரு ஏழை குடி மகனிடம் எப்படி பரிவு காட்டுகிறாள் எட்டாம் வகுப்பு ஆசிரியர் அவளின் பெற்றோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அப்போது அவளின் வீட்டாரிடம் போட்ட ஒரு தீப்பொறியால் கல்லூரியில் அவர்களை காதலர்களாக மாற்றிவிட்டது ○○அப்பாடா தீமையிலும் ஒரு நல்லது இருக்கத்தான் செய்கிறது இந்த காரியத்தை செய்த அந்த கடவுளுக்கு நன்றி ○○என்று தனக்குள் சந்தோஷம் பட்டுக்கொண்டாள்

அவள் போகுமிடமெல்லாம் அவளுக்குத்தெரியாமலேயே ஒற்றர்கள் அமர்த்தப்பட்டு இருந்தார்கள்

அவர்களை அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களுக்கு தண்ணி காட்ட முனைந்து கோவிலுக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு பையனின் குடிசைக்கு போய்விடுவாள் ஒற்றர்கள் கோவிலுக்கு போய் துழாவுவார்கள் கிடைக்கமாட்டாள்

கடைத்தெருவுக்கு போகிறேன் என்று குடிசைக்கு போய்விடுவாள் ஒற்றர்கள் கடைத்தெருவை வலம் வருவார்கள் கிடைக்கமாட்டாள்

மேற்கொண்டு படிக்க விண்ணப்பம் வாங்க கல்லூரிக்கு போகிறேன் என்று கூறி குடிசைக்கு போய்விடுவாள் வேவு பார்போர் கல்லூரியை வட்டம் அடிப்பார்கள் கிடைக்கமாட்டாள்

இப்படியாக ஆட்டம் காட்டிவருவாள் ஆனால் அம்மச்சிக்கும் வீட்டு நாய்க்கும் தெரியும் அவள் குடிசைக்கு போய் இருக்கிறாள் என்று

காரணம் அவள் இல்லாமல் வேளாவேளைக்கு தீனி போடுவோர் அவளை விட்டால் வேறுயாரும் நாயை கண்டுகொள்வதில்லை அதற்கு பசிக்கும் நேரம் பார்த்து அவள் அங்கே தான் போய் இருக்கிறாளா இல்லை ஏதாவது ஆபத்தில் மாட்டிகொண்டிருக்கிறாளா என்பதை தெரிந்து கொள்ள அவளது காலடியை மோப்பம் பிடித்து அவள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு கோகிலாவுக்கு தெரியாமலேயே திரும்பி வந்துவிடும் அம்மச்சியிடம் போட்டு கொடுத்து விடும்

அந்த சந்தோஷத்தில் நாய்க்கு அம்மச்சியே தீனி போடுவாள்

கோகிலா வீட்டுக்கு வந்தாள் சுற்றும்முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தாள்

°° நீ அந்த பையன் வீட்டுக்குதானே போயிட்டு வாரே°° என்று கேட்டாள் அம்மச்சி

°°இல்லையே°° என்றதும்

°° நாய் முறுவியது

காலில் செருப்பு எங்கே, போவும் போது செருப்பு வரும் போது வெறும் கால் போட்டுக்கொண்டு போன செருப்பு எங்கே என்று அம்மச்சி கேட்டதும்

இதோ இங்கே என்று சொல்வது போல் நாய் கவ்விக்கொண்டு வந்து பவ்வியமாக முன்னால் வைத்தது

நான் போனது யாருக்கும் தெரியாது என்றிருந்தேன் உனக்கு தெரிஞ்சிடுச்சா அம்மச்சிக்கிட்ட போட்டு கொடுத்தது நீதானா

நாய் தலையை ஆட்டியது

கல்லூரி படிப்பு முடித்தும் அவனிம் தொடர்பு குறையவில்லை அதை கண்டித்து அவளின் வீட்டார் உடனே

கோகிலா விற்கு மாப்பிள்ளை தேடி அவளுடை ஜாதகம் புகைப்படம்
எல்லாம் வாங்கிப்போனவர்கள் ஜோசியரிடம் கொடுக்க அவர்○○ அடே மாப்பிள்ளை பையா நீ அதிர்ஷ்ட க்காரன் இந்த பெண்ணை தவறவிட்டால் உனக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை பேசாமல் காவி உடுத்தி க்கொண்டு இமயமலைக்குத்தான் போகவேண்டு உன் முடிவு என்னவோ அதை காலம் தாழ்த்தாமல் நன்றே செய் அதையும் இன்றே செய் ○○ என்றார் ஜோசியர்

கார் பறந்தது பெண்ணின் வீட்டிற்கு விருப்பத்தை சொன்னான் அதே சமயத்தில்○○ கேக்கிறேன் என்று என்னை தப்பாக எண்ணவேண்டாம் அவளுக்காக உங்களால் எவ்வளவு செலவு செய்யப்போவதாக உத்தேசம் அது ஒரு தம்பிடியாக இருந்தாலும் பரவாயில்லை ○○ என்று கேட்டான்

○○சுமாராக ஒரு கோடி ○○

○○அது எவ்வளவாக இருந்தாலும் சரி அதை உங்க மாவட்ட ஆறு ஏரி குளம் இவைகளை செம்மை படுத்தி கொடுங்கள் என்னிடம் மணவறைக்கு பெண்ணை அழைத்து வரும்போது வெறும் பாவாடை தாவணியில் மட்டும் அழைத்து வந்தால் போதும் எங்கள் பரம்பரையில் பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் நகைநட்டை ஆடை
அனைத்தையும் போட்டு கட்டிக்கொண்டு போவது தான் கௌரவம் அதனால சொல்கிறேன் நீங்கள் நான் சொன்னதை கோகிலா பெயரால் ஆரம்பியுங்கள் ○○ என்று சொன்னதும் ஆச்சரியமாக பார்த்தார்கள் அதை வைத்து

வீட்டில் கலவரம் முளைத்தது அது:
○○ பணக்காரர்கள் ஒரு நாள் ஏழ்மை கோலத்திற்கு மாறலாம் அதேபோல் ஏழைகள் ஒரு நாள் பணக்காரர்கள் ஆகலாம் அதை காரணம் காட்டாதீர்கள் அதன் மேல் துளியும் நம்பிக்கை கிடையாது, நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணி க்குவேன் இதுக்கு மேல் மறுப்பு கூறினால் நான் அப்பா அண்ணன் தம்பி என்றெல்லாம் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன், உசுரை விட்டுக்குவேன் என்னை பயமுறுத்தினால் பயந்து போய் பணிந்து விடுவேன் என்று வீண் கனவு யாரும் காண வேண்டாம், நீங்கள் என்னை பெற்றுவிட்ட கடமைக்கு வளர்த்து விட்டீர்கள் அவ்வளவுதான் மீதி வேலை என்னுடையது யார் தடைபண்ணாலும் என்னால் கேட்டுக்கொண்டிருக்க முடியாது ஆமாம் சொல்லிவிட்டேன்○○ என்று ஒத்தைக்காலில் நின்றாள்

○○என்னடி உன்னால பண்ண முடியும் பொட்டச்சிக்கு திமிரான பேச்சைப்பாரு ○○ அம்மாச்சி அதட்டினாள் மறைமுகமாக அம்மச்சி பேத்தி கட்சி தான் இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்வதில்லை நான் அதட்டுற மாதிரி அதட்டுறேன் நீ அழற மாதிரி அழுது காட்டு என்ற பாலிசியது

○○ அம்மச்சி சிலர் உப்புக்கல்லிலும், படிகாரக் கல்லிலும், பனிக்கட்டி கல்லிலும், கற்கண்டு கல்லிலும் கடவுளின் சிலை வடித்து வழிபடுகிறார்கள் கடைசியில் அது
தண்ணீரில் கறைந்து கண்ணீரைத்தான் வரவைத்துக் கொள்ள முடியுமே தவிற கடவுளை காண முடியாது நல்ல மனசால எதையும் செய்யச் சொல்லி வைங்க எல்லாருக்கும் நல்லது ○○ என்றாள் கோகிலா

○○ அப்பாடா என்ன ஒரு வியாக்கியானம் இதுவரை என் வாழ்க்கை யிலேயே கேள்விபட்டதே இல்லை இதான் பட்டதாரிக்கும், படிக்காத வங்களுக்கும் உள்ள வித்தியாசம், ஓடுற தண்ணியில ஒதுங்குற தண்ணி நாத்தமா நாறுமாம், இந்த கழிசாடைகளுக்கு எப்போ தான் மண்டையில ஏறப்போவுதோ ○○ என்று முணகினாள் அம்மச்சி

அப்பாவும் அண்ணன்களும் சேர்ந்து ரகசியமாக வியூகம் வகுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை கோகிலா மேல் எல்லைகடந்த பிரியம் வைத்துள்ள நாய் எழுந்து வந்து தூங்கிக்கிட்டு இருந்தவளை எழுப்பியது பின் அவளின் உடையை வாயால் கவ்வி இழுத்து விட்டு பதுங்கி பதுங்கி முன்னோக்கிச்சென்றது கோகிலா வும் பின்னால் போனாள் ஒரு அறைக்குள் சென்று சன்னலை திறக்கச்சொன்னது அவளும் மெதுவாக திறந்து பார்த்தாள் அப்பாவும் அண்ணன்களும் அவள் விரும்புகிறவனை தீர்த்து கட்ட வியூகம் வகுப்பது தெரியவந்தது, நாயிடம் சுண்டுவிரலையும், கட்டைவிரலையும், நீட்டி காதில் வைத்து காட்டினாள், நாய் புரிந்து கொண்டு ஓட்டமாக ஓடி அவளுடைய கைப்பேசியை கவ்விக்கொண்டு வந்து அவள் கையில் கொடுத்தது, அதன் மூலம் படம் பிடித்து கொண்டாள், அவர்கள் பேச்சும் பதிவானது, எடுத்துக் கொண்ட அவள் நாயிக்கு ஒரு முத்தம் கொடுத்து அனுப்பிவிட்டாள் தன் இருப்பிடம் வந்தாள் கணிணியை முடுக்கி வட்ட போலீஸ் கமிஷ்னருக்கு ஒரு கடிதம் எழுதி எடுத்துக்கொண்டாள்

கமிஷனர் கிட்ட போய் ○○ சார் வணக்கம், கடிதத்தை நீட்டி இன்ன விலாசத்தில் உள்ள பையனை நான் மனதார விரும்புகிறேன் எங்கள் வீட்டில் அதற்கு மறுப்பு கூறுகிறார்கள் அதனால் நான் அவர்களை கடிந்து கொண்டேன் அதை வைத்து பையனையே போட்டு தள்ளிவிட்டால் பிறகு நாம் சொல்வதைத்தான் அவள் கேட்டாகனும் என்று முடிவு பண்ணி கைப்பேசி மூலமாக சரியாக இந்த நேரத்துக்கு யாரையோ அழைத்தார்கள் சற்று நேரத்தில் ஒரு நான்கு பேர் வந்தார்கள் அவர்களுக்கு பணம் கொடுத்து அந்த பையனோட விலாசத்தையும் அவனுடைய புகைபடத்தையும் கொடுத்து விட்டார்கள் அதற்கு உண்டான வீடியோவை உங்க வாட்ஸப்பில் அப்லோடு செய்துள்ளேன் ஆதாரமாக, சார் அவனை எப்படியாவது காப்பாற்றுங்கள் சார்○○ என்று வேண்டி கேட்டுக்கொண்டாள்

○○சரிமா நீ பயப்படாம வீட்டுக்கு போ நான் அவனுக்கு ஒன்னும் ஆகாதபடிக்கு பார்த்துக்கொள்கிறேன்○○ என்று போலீஸ் கமிஷனர் சொன்னார்

○○ இன்னொன்னு தெரியுமா சார் ○○
என்றாள் கோகிலா

○○ ம்...சொல்லுமா ○○ கமிஷனர்

○○ நீங்க தப்பா எடுத்து கொள்ளாதீங்க சில ஆம்பளைங்க ஆம்பளையா இருந்து கொண்டு பொம்பள மாதிரி நடந்து கொள்றாங்க, சில பொம்பளைங்க பொம்பளையா இருந்து கொண்டு ஆம்பளை மாதிரி நடந்து கொள்றாங்க இவங்க எந்த ரகமுன்னு யூகிங்க, வறேன் சார் ○○ என்று கூறி வந்துவிட்டாள்

கமிஷ்னர் சற்று யோசித்துப் பார்த்துவிட்டு, ஒரு இன்ஸ்பெக்டர் நாலு கான்ஸ்டபிள் விஷயத்தை விவரமாக விவரித்து சொல்லி மப்டியில் அனுப்பி வைத்தார்

பையன் வெளியில் புறப்பட்டு போகையில் நான்கு பேர் பின்னாடியே ஒன்றும் தெரியாதவர்கள் போல் போனார்கள் அங்கே மனித நடமாட்டம் இருந்தது அதுவரை எதுவும் செய்துவிடாமல் அமைதியாக சென்றார்கள்

போலீஸார் நான்கு பேரும் அந்த நான்கு பேரை பின் தொடர்ந்து போனார்கள் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பையனை மடக்கி கையில் இருந்த ஆயுதத்தை எடுத்து ஓங்கினார்கள் கையை ஓங்கிய நாலுபேர் தோளில் நான்கு குண்டுகள் துளைத்தது பின் அவர்களை ஓடிவிடாமல் இருக்கச் செய்ய நாலுபேர் காலில் நான்கு குண்டுகள் பாய சுருண்டு விட்டார்கள்

பையனிடம் கேட்டார் இன்ஸ்பெக்டர் ○○ பணம் ஏதாவது எடுத்துக்கொண்டு போகிறாயா?○○

○○ இல்லீங்க சார்○○

○○ பிறகு தங்க ஆபரணம் ஏதாவது அணிந்து இருக்கிறாயா?○○

○○ இல்லீங்க சார் ○○

○○ அவர்கள் தப்பாக எடைபோட்டு உம்மை தொடர்ந்து இருக்கிறார்கள் போலும் பயப்படாதே நீ புறப்படு○○ என்று உண்மை யை சொல்லாமல் அனுப்பிவிட்டு விழுந்து கிடந்த நாலுபேரையும் வேன் வரவழைத்து தூக்கிப்போட்டு போனார்கள்

கமிஷ்னர் சொன்னார் ○○ இவன்களை ரிமாண்டில் போட்டு அவங்க டிமாண்டு என்னனு விசாரித்து சொல்லுங்க○○ என்றார்

அடி தாங்க முடியாமல் உண்மையை கக்கினார்கள் அதை வைத்து போலீஸ் வேன் ஆள் அமர்த்தியவர் வீட்டுக்குப் போய் கடிதத்தில் குறிப்பிட்டிருந் தவர்களை இழுத்து வந்தது அதை கவணித்த நாய்க்கு ஒரே ஆனந்தமாக இருப்பதை வெளிப்படுத்தியது கோகிலா விடம் ஓடியது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டாட

கோகிலா வும் அடுத்தவர் முன்பு ஒன்னும் தெரியாதவள் போல் நடந்து கொண்டு நாயிடம் சந்தோஷத்தை கொண்டாடினாள்

ஊரார் அவர்களை பார்த்து ○○ இவங்க நல்லவங்கன்னு நெனைச்சி மரியாதை கொடுத்துக்கொண்டு இருந்தோம் இந்த காலத்தில் நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு கண்டுபிடிக்கவே ரொம்ப கஷ்டம்பா○○ என்று பேசினார் கள்

ஸ்டேஷனில் போனவர்கள் கொஞ்சத்தில் ஒத்துக்கொள்ளவே இல்லை இதற்கு ஒரே வழி ரிமாண்டு

உண்மையை ஒத்துக்கொண்டார்கள் அதன் பின் பையனுக்கும் பொண்ணுக்கும் அங்கேயே அவர்கள் ஒப்புதலோடு கல்யாணம் நடத்தப்பட்டது அத்தோடு எனக்கும் சொத்தில் பங்கு உள்ளது என்று பிரித்து வாங்கிக் கொண்டாள் அதில் பத்து ஏக்கர் விளைநிலமாக பம்பு செட்டோடு வாங்கி போட்டாள்

பெண் பார்க்க வந்தவன் காவி உடையணிந்து இமயத்திற்கு சென்று விட்டான்

ஆறு ஏரி குளமெல்லா வற்றிற்கும் வருத்தம் அதிர்ஷ்டம் கைகழுவி விட்டு விட்டது அதாவது ஏமாற்றி விட்டதே என்று

மாமியாரை கல்லுடைக்கப் போக வேண்டாம் என்று வீட்டோடு நிறுத்தி விடவில்லை " பை நெல்லை நம்பி கை நெல்லை இழக்க தயாராக இல்லை " போதுமான வருமானம் கிடைக்கும் அளவுக்கு இருவருக்கும் வேலையும் கிடைத்தது லீவு நாள் வரும் போது தானும் சென்று மாமியாருக்கு ஒத்தாசை செய்வாள் புது வசதி வந்து விட்டது என்பதற்காக இருந்த வசதியை
ஒதுகிவைக்க விரும்பவில்லை

ஒரு பெண் நினைத்துவிட்டால் இதையும் செய்வாள் வேறு எதையும் செய்வாள் என்பதை அன்றுதான் புரிந்து கொண்டார்கள் அவள் பேச்சு க்கே யாரும் போவதில்லை
•••••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (29-Jul-19, 10:19 pm)
Tanglish : penne elu
பார்வை : 253

மேலே