அன்பு

அன்பு 🙏🏽

'வானம்' தூரத்தை உணர்த்தும்
'பூமி' பொறுமையை கற்பிக்கும்
'மலை' உயர்வின் எடுத்து காட்டு
'கடல்ஆழம்' பெண்கள் மனதை பறைசாற்றும்
'சூரியன்' உழைப்பின் அடையாளம்
'நிலவு' மெளனத்தின் இலக்கனம்
'மழை' கொடை வள்ளல்களின் முன்னோடி
'மரம்' மானுடம் பெற்ற வரபிரசாதம்
'மழலை' இறைவன் படைப்பில் அபாரம்
'நட்பு' மானுடம் கண்டெடுத்த பொக்கிஷம்
'காதல்' உயிருள்ள
ஜீவன்களின் உரிமை
'குடும்பம்' மனிதன் ஏற்படுத்திய ஆக பெரிய அதிசயம்
'ஆசை' மானுடத்தின் வளர்ச்சி
'பேராசை' மனிதனின் வீழ்ச்சி
'அன்பு' கடவுளின் இருப்பிடம்.
- பாலு.

எழுதியவர் : பாலு (30-Jul-19, 11:59 am)
சேர்த்தது : balu
Tanglish : anbu
பார்வை : 1061

மேலே