பொக்கிஷம்

'பொக்கிஷம்'

ஒரு கைப்பிடி பாசமும்
இரு கைப்பிடி தன்னம்பிக்கையும்
ஊட்டி வளர்த்த பெண் குழந்தை
இன்று;
நட்பை சுவாசித்து
உறவுகளை நேசித்து
கல்வியில் சிறந்து
ஆளுமை நிறைந்து
கண்ணியமான ஆண்மை மதிக்கும்
அறிவுச் சுடரான
புதுமைப் பெண்;
பாரம்பரியம் மாறாது
பெண்மையின் பண்புகள் மெருகேற
அவளது உணர்வுகளுக்கு பாதுகாவலனாகும்
'வாழ்வின் நாயகன்'
அவளது விலைமதிப்பற்ற பொக்கிஷம்!

~ நியதி ~

எழுதியவர் : நியதி (30-Jul-19, 3:51 pm)
Tanglish : pokkisham
பார்வை : 224

மேலே