குன்றேறினால் குன்றும் வினை

குன்று தோறும் குடிகொண்டோய்
குமரன் என்று பெயர் கொண்டோய்
நெஞ்சில் எங்கும் நிறைந்து நின்றோய்
நேசத்தோடே பெரும் வாழ்வு தந்தோய்

ஆசைக் கொள்ளும் உருவம் கொண்டோய்
ஆடம்பரம் விட்டு விலகி நின்றோய்
அப்பாவிற்கே நற்பாடம் சொன்னோய்
அதர்மத்தை கோபத்தேடே எதிர்த்து நின்றோய்

தமிழுக்குத் தலைமை ஏற்றோய்
தன்னிகரில்லா தமிழுக்கு புலவர் தந்தோய்
தங்கத்தில் கையில் வேல் கொண்டோய்
தோழனாய் எமக்கு துன்பத்தில் தோள் தந்தோய்

திருத்தணி திருப்பரங்குன்றம் செந்தூரில்
தீரத்தோடே எழிலாய் உருவங்கொண்டு
திரண்டு வரும் தோழ பக்தர்களுக்கு
தேவையை தீர்க்கும் தேவ தளபதியே வணங்குகின்றேன்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (31-Jul-19, 10:03 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 38

மேலே