அன்னை யசோதை

மடியிலிருந்த பிள்ளை எழுந்து நின்றான்
செல்லமாய் அன்னையின் கழுத்தைத் தழுவி
முகமெல்லாம் முத்து முத்தாய் முத்தங்கள்
சிதறவிட்டான் முத்து மழைத் தூறலாய்
அவள் முகமும் முத்து குளமாய் மாறிடவே,
அன்னையவள் குழைந்தை இன்பத்தின்
உச்ச நிலையில் இப்போது...கட்டியணைத்தாள்
பாலனை பாலகிருட்டிணனை, உச்சி முகர்ந்தாள்.
'என் கண்ணா ஏன் இப்படி கன்னத்தில் முத்து
மழைப் பெய்தாயோ' என்று கேட்க , மாயன்
கண்ணனும் பேசினான்…. ஆம் குழந்தைக்
கண்ணன் பேசினான் இப்போது' ' அம்மா
என்னென்று கூற தெரியவில்லை அம்மா
இதை எப்படி சொல்வேன், தாயாய் தந்தையாய்
இயங்கும் எனக்கே தாயாய் என்னை உன் மடியில்
வைத்து பாலூட்டி தாலாட்டுகின்றாய் , தாயே
என்ன தவம் செய்தனையோ நீ யசோதாய் '
என்றான் அசரீராய் ….. குரல் மறைந்தது
ஆச்சிரியத்தின் எல்லையில் அன்னை யசோதை,
அவள் மடியில் உலகமுண்டான் துயில்கொள்ள
தாலாட்டு பாடுகின்றாள் அவள்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (2-Aug-19, 1:14 pm)
பார்வை : 290

மேலே