காதல் கவிதை யாரோ நீ யாரோ

யாரோ நீ யாரோ
மனம் தேடுதே உன்னையே
வாசல் கதவை மூடாமல்
எதிர்பார்த்து நிற்குதே நாளுமே

நானொரு தீவாய் மாறியே
எந்நேரமும் மிதக்கிறேன் குளிரிலே
நீயொரு தீபமாய் மாறியே
என்னை அணைத்திடு மார்பிலே

தோப்பில் தனிமரமாய் ஆகியே
தொலைந்துபோகிறேன் தவிப்பிலே
காற்றாய் நீயும் மாறியே
கதைகள் பேசி முத்தமிடு தென்றலே

எனோ மழைமேகம் ஆகியே
முல்லைமேல் கவிழ்கிறேன் தினவிலே
செங்கனலாய் நீயும் மாறியே
தேகம் சிலிர்த்தே சிலுப்பிடு காதலே

நானும் நிலவாய் மாறியே
நதியில் மீனாய் நீந்துகிறேன் இரவிலே
அன்னபட்சியாய் நீயும் மாறியே
தாலாட்டிடு தாயன்பின் வடிவிலே

யாரோ நீ யாரோ
மனம் தேடுது உன்னைத்தானே
தரிசனம் தந்துவிடு
உண்மையென உணர்ந்திடுவேன்
நான் யாரென என்னை நானே!!!.....

எழுதியவர் : மேகலை (2-Aug-19, 1:28 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 204

மேலே