வானமே எல்லை

'வானமே எல்லை'


போதும் பெண்ணே வீண் விடுதலைப் பேச்சு;
உன்னை ஆளுது ஆணாதிக்க மூச்சு;

மூல காரணம் நீ என்பதே நிதர்சனமாக
உன் உள்ளுணர்வை வேதம் என நம்பி
அதன் சொல்வழி பொறுமையுடன் செயலாக்கு ;

எதிர்பாலினருக்கு தாயாக இருந்து
அறிவில் சுடராய் அசம்பாவிதம் விலக்கு;

நியாய கோபம் கொண்டு அநீதியை எதிர்த்து
தவறை தட்டி கேட்டு ரௌத்திரம் பழகு;

அழகான தேவதை நீ கவர்ச்சிப் பொருளாவதை மறுத்து நில்;

நீ தாயாக கர்ப்பத்தில் மனிதத்தை மதிக்கும் நற்சிந்தனையை விதைத்து
சோறூட்டும் போது ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்து
நீயே ஒரு பெண்ணின் கண்ணீருக்கு காரணமாவதை தவிர்;

உன் ஆண்மகனை மனசாட்சிப்படி வாழ வழிகாட்டி
தாய்மைக்கு வானமே எல்லை என்று போற்று....!

~ நியதி ~

எழுதியவர் : நியதி (2-Aug-19, 10:20 pm)
Tanglish : vaaname ellai
பார்வை : 250

மேலே