நண்பர்கள் தின வாழ்த்துகள்

நட்புக்கு இல்லையே இலக்கணம்
நட்புக்கு இல்லையே தலைக்கனம்
நட்புக்கு இல்லையே பொறாமை
நட்பே உலகின் பேருண்மை

நட்பென்றால் சோகத்தைப் பகிர்வது
நட்பென்றால் மகிழ்ச்சியைப் பெருக்குவது
நட்பென்றால் துன்பமும் நில்லாது
நட்பென்றால் இன்பமே என்றுமே

நட்பென்ற சொல்லே உயர்ந்தது
நட்பென்ற உறவே உகந்தது
நட்பென்ற ஒன்றை படைத்ததால்
நட்பழைப்பு கடவுளுக்கும் அனுப்புவோம்

நட்புக்கு இன்றொரு நாள்மட்டுமா
நட்பெழுத சிற்சில‌ தாள்மட்டுமா
நட்பைப் போற்றுவோம் நண்பரே
நட்புக்கு ஒப்பேதும் இல்லையே!

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (4-Aug-19, 8:14 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 342

மேலே