பிக்பாஸ் - வாசமில்லா வார இறுதி

வியாழனின் தொடர்ச்சியாய் வெள்ளியும் முக்கோணக்காதல் முட்டிக்கிட்டு நிக்கும்ன்னு பார்த்தா நல்லா விளையாண்டவங்க, விளையாடாதவங்க தேர்ந்தெடுத்தலில் சரவணனுக்கும் சேரனுக்கும் பத்திக்கிச்சு. தன்னையே எப்போதும் சாண்டியும் கவினும் நல்லா விளையாடாத வரிசையில் நிப்பாட்டுவதையும் அதைச் சிலர் ஆதரிப்பதையும் குரல் கொடுத்த சேரன், சரவணன் என்னய்யா விளையாண்டாருன்னு கேக்க, சரவணன் ஒருமைக்குப் போய் அடிக்கத் தாவி... தான் நடிகனாய் உச்சத்தில் இருந்தபோது (அவர்தான் சொன்னார்) இவன் இணை இயக்குநர் என் வீட்டில் வந்து நிற்பான் என்றெல்லாம் பேசினார். அன்றைய நிகழ்ச்சி இச்சண்டையில் சிறப்பாய் நகர்ந்து வீட்டின் தலைவராய் முகனைத் தேர்ந்தெடுப்பதில் முடிந்தது. வீட்டுக்காரர் தலைவரானதில் தானைத்தலைவி அபிராமிக்குத்தான் கொண்டாட்டம்... பின்னே நாட்டாமை பொண்டாட்டி நாட்டாமி இல்லையா..?



சனிக்கிழமை : இதுவரை கருப்பணசாமியாய் மீசையை முறுக்கிக் கொண்டு நின்ற ஆண்டவர் அத்திவரதராய்க் காட்சியளித்தார். தலைவன் இருக்கிறான் மற்றும் இந்தியன் படப்பிடிப்பில் இருப்பதால்தான் அத்திவரதராய் வந்திருக்கிறேன்... முத்திக்கிட்ட முக்கோணக் காதலுக்காக நான் மீசை எடுக்கவில்லை என விளக்கவுரை கொடுத்தார்.



பின்னர் வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் பார்க்கச் சொன்னார். எப்பவும் போல் பாடலுக்கு ஆட்டம்... ஷெரின் ஜெயிலுக்குள்... அதுவும் லாஸ்லியாவுடன் என்பதால் சாக்சியின் நடனம் கூட ஜெயில் கம்பிக்கிட்டத்தான்... எங்கே ஷெரின்-லாஸ் லவ்விருவாங்களோன்னு பயம்.



அப்புறம் அணி பிரித்தல் ஜெயிலுக்கு முன்னே.. மாவாட்ட வேண்டிய நிலை கைதிகளுக்கு... பின்னர் விடுதலை... அப்புறம் ஆண்கள் பெண்கள் இருபிரிவாகி லவ்வைச் சொல்ல, அதுல எவன் ஹீரோன்னு நாலு நடுவர்களும் கலந்து ஆலோசித்துச் சொல்ல வேண்டும். ஷெரினுக்குப் புரபோஸ் பண்ணுன தர்ஷன் வெற்றியாளர். தர்ஷன் சொன்ன கதை சூப்பர்... நாளுக்கு நாள் தர்ஷன் மக்கள் மனதில் முன்னேறிக் கொண்டேயிருக்கிறார். இதில் என்ன கொடுமைன்னா... கவின் ரெண்டு பேருல யாருக்கிட்ட லவ்வைச் சொன்னாலும் மறுபடியும் நெருப்புப் பத்திக்கும் என்பதால் பிக்பாஸ் நீ நடுவர்ல உக்காருப்பான்னு சொல்லிட்டார்... பாவம் பய லாஸ்கிட்ட லவ்வச் சொல்லியிருக்கலாம்... ஆனா வடை போகலை... பிக்பாஸ் வடையைக் கொடுக்கவேயில்லை.



அப்புறம் ஆண்டவர் வந்தார்.... சேரன்-சரவணன் பிரச்சினையை மிகச் சிறப்பாகக் கையாண்டார்.... சரவணன் மன்னிப்புக் கேட்டார். சாக்சி-கவின்-லாஸ்லியா பிரச்சினையை ரொம்ப இழுக்கவில்லை... அதிகம் பேசவில்லை... இதில் பேச என்னயிருக்கு... கவின் ஆரம்பிக்கும் போதே நிறையப் பேசிட்டீங்க என இழுவைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.



சாக்சியை வாரிய ஷெரினுக்குப் பூங்க்கொத்துக் கொடுத்தார். நல்லாப் பேசினாலே எனக்கு விளங்காது... இது சுத்தமாப் புரியலை சார் என தன்னை ஓட்டிய கவினை புரிய வேண்டியதெல்லாம் சரியாத்தானே புரியுது எனத் திருப்பி அடித்தார். லாஸ்லியாவை அங்கிருந்து மீண்டு முன்னால் வான்னு சொன்னார். ஏனோ அன்றைய பேச்சில் விறுவிறுப்பு இல்லை... குறிப்பாய் காதல் படுத்திய பாட்டில்.



மது காப்பாற்றப்பட்டார்... நீங்க நாலு பேரும் நாளைக்கு வரைக்கும் நீயா நானான்னு புலம்பிச் சாகுங்கன்னு சொல்லிட்டு நடையைக் கட்டிட்டார்.



ஞாயிறு : அத்திவரதர் வரும் போதே நாம் செய்த முன் வினைப்பயன் அப்படின்னு என்னமோ பேசி... என்னமோ சொல்லி... நம்மளையும் குழப்பி அவரும் குழம்பி ஒரு வழியா அவர் அகத்தை மறைத்து அகம் டிவி வழியே மற்றவர்களின் அகமும் புறமும் காணப் பொயிட்டார்.



போனில் ஒரு கேள்வி என ஒரு பெண் லாஸ்லியாவிடம் பேசினார்... நீ எதுக்கு இங்க வந்தே... வந்த வேலையை சரியாச் செய்யிறியா என்ற கேள்வியில் வந்த வேலையை விட்டுட்டு எதுக்கு அந்த வேலை பாக்குறேங்கிற உண்மைக் கேள்வி தொக்கி நின்றது. நான் லாஸ்லியாவை எல்லாருக்கும் தெரியப்படுத்தவே வந்தேன்... ஆனா கவின் களவாணிப்பய எனக்கு மட்டும் தெரிஞ்சாப் போதும்ன்னு சொல்லிட்டான்... அந்தத் டீலிங்க் எனக்குப் பிடிச்சிருக்கு... எப்போ அது பிடிக்கலையோ அப்ப நான் எல்லாருக்கும் என்னைத் தெரியப்படுத்துவேன்னு நம்மளைப் படுத்தி எடுத்திருச்சு.. இடையில் ஆயிரெத்தெட்டு 'ஓம்' வேற.



அப்புறம் தாங்கள் அந்த வாரத்தில் நடித்த... மன்னிக்கவும் ஒரிஜினலைக் கொன்னு போட்ட கதாபாத்திரமாய் கேள்வி கேட்கிறோம் சார்... நீங்க மறைக்காமல் உண்மையான பதிலைச் சொல்லுங்கன்னு சரவணன் சொல்ல, சரி இன்னைக்கு மொத்தமா மொக்கை போடப்போறாங்கன்னு மனசுக்குள் மணி அடிச்சிச்சு.



அதேதான் நடந்தது... கேள்விகளையெல்லாம் எப்புடி இவ்வளவு யோசிச்சிக் கேட்டாங்கன்னு தெரியலை... அதுக்கு ஆண்டவர் வேற ரொம்பச் சீரியஸா பதில் சொல்லிக்கிட்டு இருக்காரு.... ஏங்கெரகம்... இந்தப் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்த வந்துட்டு இந்த மொக்கைக்கெல்லாம் மொக்கை போட்டுக்கிட்டு இருக்கேனேன்னு ஆண்டவர் நினைச்சிருப்பார்.



இதுல மது ஒரு படி மேல போய் கமல் தம்பின்னு கூப்பிட்டு ஜென்ம சாபல்யம் அடைஞ்சிக்கிச்சு... கேட்டா நான் சரோஜா தேவிப்பான்னு சொல்லுது... அவங்க என்னை மகன்னு கூப்பிடுவாங்கன்னு ஒரு அசட்டுச் சிரிப்பை வச்சாலும் மனசுக்குள் நீயெல்லாம் என்னைத் தம்பி போடுறே... எல்லாம் என்னோட தலையெழுத்துன்னு நினைச்சிருக்கலாம். சாண்டி ரொம்ப ஓவர்... சிம்புவாய் நடிக்கிறாராம்... முடியலை.



லாஸ்லியா மன்மதன் அன்பு படப்பாடல் குறித்துக் கேட்ட போது நீங்கள் இன்னும் காதலில் இருந்து வெளிவரவில்லை என அடித்தது.... ஆண்டவரின் குறும்பு. ஒரு வழியாக கேள்வி கேட்கும் படலம் முடிந்தது. உடனே அடுத்த விளையாட்டுக்குப் போயிட்டார் ஆண்டவர்.



ரெண்டு ரெண்டு பேரா உக்காரு... இப்ப நான் ஷெரின் பற்றிக் கேள்வி கேட்டால் பக்கத்தில் இருக்கும் லாஸ்லியா ஷெரினாக மாறிப் பதிலளிக்க வேண்டும் என்றார்... பெரும்பாலும் கேள்விகள் எல்லாமே பிக்பாஸ் விமர்சனங்களாய் இணையத்தில் எடுத்து வைக்கப்படும் கேள்விகள்தான்... ஆண்டவரும் விஜய் டிவியும் இணையத்தில் வரும் எல்லாப் பதிவுகளையும் வாசித்து உடனுக்குடன் அப்டேட்டுவதே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கான முக்கியக் காரணி.



இந்த விளையாட்டு... விளையாட்டுன்னு எல்லாம் சொல்லக்கூடாது... செம மொக்கை. சேரனெல்லாம் அபிராமி மாதிரி நடந்துக்கிட்டது... சாண்டி சாக்சி போல் செய்தது... ரேஷ்மா கவினாய்... லாஸ்லியா ஷெரினாய்.... எதுவுமே முடியலை...



சனி, ஞாயிறுகள்தான் கமலின் வருகை, பேச்சு எனத் தரமாய் இருக்கும்... வாரம் முழுவதும் கவினும் சாக்சியும் லாஸ்லியாவும் வச்சிச் செஞ்சாங்க... கமலால் ஆறுதல் கிடைக்கும்ன்னு பார்த்தா அவரு... அதுக்கு மேல வச்சி வச்சிச் செஞ்சாரு... முடியல.



ஒரு வழியா நாமினேசனுக்கு வந்து கவின்-சாக்சி, ரேஷ்மா-அபிராமி என விலங்கிட்டு அதில் கவினைக் காப்பாற்ற, என்னை அனுப்பிடுங்க சார் என சாக்சி திருவாய் திறக்க, அது எப்படி நீயும் பொயிட்டியன்னா நானும் பொட்டியைக் கட்ட வேண்டியதுதான்னு சொல்லி இடைவேளை விட்டுட்டுப் பொயிட்டாரு.



அப்புறம் வந்தவர் அபி, சாக்சியை உள்ளிருக்க வைத்து ரேஷ்மாவை வெளியில் அழைத்தார். இதுவும் மக்கள் தீர்ப்பெல்லாம் இல்லை... சாக்சியை உள் நிறுத்தவே... வெளியில் வந்த ரேஷ்மாவிடம் நீங்க ஒரு கோடி முப்பது லெட்சம்... அவுக ஒரு கோடியே முப்பத்திரெண்டு லட்சம்.. கொஞ்சம் வித்தியாசம்தான்... இதை உள்ளே நான் சொல்ல முடியாதுன்னு சொன்னதெல்லாம் மக்கள் ஓட்டுத்தான் வெளியே வருபவர்களைத் தீர்மானிக்கிறது என்று சொல்வதற்காக...



முகன்தான் கொஞ்சம் ஓவராச் சீனைப் போட்டான்... என்னமோ அவன் நாமினேட் பண்ணினதாலதான் ரேஷ்மா வெளியேற்றப்பட்டதாய் அழுது புலம்பினான். உடனே அபி 'ஹாய் பேபி' என அணைத்துக் கொண்டார். சாக்சி-கவின் காதல் பிரச்சினையைப் பெரிதாக்கிப் பேசிக்கொண்டிருக்கும் போது இவங்க ரெண்டு பேரும் சத்தமேயில்லாமக் குடும்பம் நடத்திக்கிட்டு இருக்காங்க... யாருமே கண்டுக்கலை... அதைவிடக் கொடுமை என்னன்னா... எதாச்சும் ஒரு விஷயம்ன்னா... என்னம்மா தம்பி என்ன சொல்றான் அப்படின்னு வீட்டுல பெரியவங்க கணவனைப் பற்றி மனைவிக்கிட்ட கேக்குற மாதிரித்தான் கேக்குறாங்க... என்னமோ நடக்குது... இந்தக் கூத்தை அந்த ஒண்ணத்துக்கும் உதவாது கூத்து பின்னுக்குத் தள்ளிவிட்டதில் சத்தமில்லாமல் பிண்ணிக்கிட்டிருக்காங்க முகாபி.



வெளிய வந்த ரேஷ்மாவிடம் கமல் பேசி, குறும்படம் போட்டு, நண்பர்களிடம் பேசவிட்டு அனுப்பி வைத்தார். கமலுடன் பேசும் போது ரேஷ்மா சொன்னாங்க... ஏதோ பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கத்தான் வந்தேன் அதைச் சரியாகச் செய்தேன்னு சொன்னாங்க... ஆமா என்ன விழிப்புணர்வுன்னு விழி பிதுங்க யோசிக்க வேண்டியிருக்கு...



எது எப்படியோ வாழ்வில் காயம்பட்ட பெண்ணாய்... இழப்புக்களைச் சந்தித்த பெண்ணாய்... தனியே வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் ரேஷ்மாவுக்கு இந்த 42 நாள் மிகச் சிறப்பானதாய் அமைந்திருக்கும்... வெளியில் சென்றபின் வாழ்க்கை சிறப்படையட்டும்.



சாக்சிக்கான அறுவடை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது... எல்லாம் பிக்பாஸ்க்கே வெளிச்சம்.



முகன் இன்னைக்கு கட்டிலை ஒடைக்கிறானாம்... புருஷன் பொண்டாட்டி சண்டையில் இதெல்லாம் சகஸம் என்றாலும் சாக்சிக்கு ஒரு லாஸ்லியா போல அபிக்கு சாக்சி மாறுவாரோங்கிற மாதிரி புரோமோவெல்லாம்.... இதெல்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனா முழுமையான நிகழ்ச்சி பாக்கும்போது மரண மொக்கையாவுல்ல இருக்கு பிக்பாஸ்.



பிக்பாஸ் இனி அப்ப அப்பத் தொடர்வோம்.



நன்றி.

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (5-Aug-19, 4:23 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 48

சிறந்த கட்டுரைகள்

மேலே