மழையில் நனைந்த மலைகள்

மழை சாரலில் மலை காடுகள்

மழை சாரலில்
நனைந்த மலைகள்
அதன் மேல் பரவிய
நீரால் தெரிந்திடும்
வழுக்கை !

இடையிடை வெட்டிய
வடுக்கள் ! அதனுள்
வளைந்தும் நெளிந்தும்
பாதைகள் !

அங்கங்கே
சிக்கிய மயிர் போல்
ஊன்றி நிற்கும்
ஒரு சில மரங்கள்

அதன் வேரில் சேரும்
மண்
அது சேமித்து வைக்கும்
மழை நீர் !
மண்ணின் மேல்
வளரும் பச்சை புற்கள்.
அந்த புற்களை
தலை கீழ் நின்று மேயும்
கடை மான் !
கரணம்
தவறின் மரணம் !
இருந்தும் மேயும்
மான் மேல் பாய
துடிக்கும் சிறுத்தை !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (5-Aug-19, 4:44 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 537

மேலே