வெற்றியை தேடு

வானம் எல்லை என்றுதான்
பறவை பறக்குது
வாழ்க்கை இருக்கு என்றுதான்
அதன் சிறகை விரிக்குது

ஒருபோதும் கரையாதே கரையாதே
கடல் நீரும் இனிக்காதே இனிக்காதே
மழைமேகம் மறைந்தாலும்
ஒரு நாள் தண்ணீராய் உருமாறும்

இமயம் தாண்டி வழிகள் தேடு
இதயம் தாங்கும் வலிகள் இருக்காது
ஒரு கை பார்ப்போம் துணிந்து போராடு
புதிதாய் படைப்போம் ஒரு வரலாறு

எழுதியவர் : (5-Aug-19, 9:34 pm)
சேர்த்தது : ABDUL BACKI
Tanglish : vetriyai thedu
பார்வை : 49

மேலே