மிழும்_எழிலும்

#############
நல்வழி காட்டும்
___ நயமான சாந்தம்
நலமாக வளரும்
__நிலமிசை மதியும்
அலகிலா அழகும்
___ அளவான புகழும்
அந்தம் மறையாத
__அகமும் புறமும்
ஆற்றல் அருளும்
__ஆரவார துளியும்
அமுதம் நல்கும்
__அன்பான மனமும்
நிறைந்து உள்ளதே
__திகழும் எழிலும்
விடியல் உறவாய்
__விரையும் ஒளியும்
கவியின் வண்ணம்
__காய்த்து( க்) துள்ளும்
காற்றோடு மலரின்
___காதலின் உறவும்
தமிழின் மனதோடு
__தவழும் காதலும்
தங்கத் தமிழை
___தன்னோடு வைக்கு(ம்)
மலரும் மொழியிலே
___மயக்கு(ம்) அழகியா(ய்)
மகிழ்வை கொடுக்கு(ம்)
__மதியும் இவளும்
வலிமை ஊற்றே
__வழிகாட்டு(ம்) பயணமு(ம்)
புன்னகை கொண்டே
__புதுமை செய்யும்
நறுமண தமிழும்
__ நாவை வெல்லும்
கற்றது புரியவும்
___கற்காத அறியவும்
சிந்தையி(ல் ) திலகம்
__சிந்தியே நின்றாடும்
உலகில் உதித்த
___உயரும் மொழியே
அகிலன் ராஜா (இராசரத்தினம் அகிலன்)

எழுதியவர் : Akilan raja (6-Aug-19, 8:58 am)
பார்வை : 61

மேலே