வானத்தில் நிச்சயதார்த்தம் பூமியில் மணமேடை

நீர்நிலைகள் எங்கெங்கோ
நீராவிகள்
முகில்களாய் வாலிபமுற்றன….
அங்குமிங்குமாய் அலைந்தவை
கொஞ்சம் நெருங்கிக்
கூச்சப்பட்டன…
காதல் உணர்வுகள்
மின்னலாய்ப் பூத்தபோது
உறவுகள் ஒன்றுகூடி
நிச்சயதார்த்தம் நடந்தது!
இடியோசை மேளதாளமானபோது
மணமக்கள் பூமிக்கு வந்தார்கள்…
நிச்சயதார்த்தம் வானத்திலென்றாலும்
திருமணமென்பது
பூமியில்தானே!
மண்ணில் நீர்கலந்த மணவாழ்க்கை
நாளை
பூத்துச் சிரிக்கும்
குழந்தைகளாக!
- மீனாள்செல்வன்

எழுதியவர் : மீனாள்செல்வன் (6-Aug-19, 5:32 pm)
சேர்த்தது : மீனாள்செல்வன்
பார்வை : 236

மேலே