பெருங்கவி அபிக்கு விஷ்ணுபுரம் விருது----------------- -பதிவுகள்---------------

கவிஞர் அபியின் கவிதைகளில் உருத் திரண்டு வரும் உருவங்கள் விசேஷமானவை. தமிழ் நவீனக் கவிதைகள் பிம்பங்களை எதிர்கொள்ளும் இடங்கள் கவிதை ரசிகனாக எனக்குப் பிடித்தமானது. அபியின் கவிதைகளில் அடிக்கடி பிம்பங்களைப் பார்க்க முடியும். அப்படியான அவரது ஒரு கவிதை உண்டாக்கிய அனுபவம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அந்தப் பாதிப்பில் ‘கண்ணாடி பிம்பங்களின் இசை’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.

அபிக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு

என் வாழ்த்துகள்

மண்குதிரை

[முகநூலில்]*

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டிருப்பது உளமார்ந்த மகிழ்ச்சி. இவ்விருதை இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே வழங்கியிருந்தால் நவீனகவிதைகளின் வரையரையொன்று உருவாகியிருக்கும் துரதிருஷ்டம் என்பது மொழிக்கும் நிகழக்கூடாதா என்ன?80 பதுகளின் இறுதியில் உருவான கவிதைகளின் ரசாயன மாற்றத்தில் அபியின் கவிதைகள் 2000 த்தை நோக்கி நகர்ந்தவை அப்போதைய அபியின் கவிதைகளை பேசமுடியாத சூழலும் முற்போக்கு நண்பர்கள் பலரின் அறிமுகம்மட்டுமே.இன்றைய சூழல் அப்படியில்லை.அபியின் கவிதைகளை உள்வாங்கும் முன்னகர்த்தும்! என்றே நம்புகிறேன்.அபியின் கவிதைகள் அனைத்தும் நீங்கள் நம்புகிற நவீனத்துவத்துதையும் தாண்டி நிற்பவை.வாழ்த்துக்கள் அபி சார்.ஜி.பி.இளங்கோவன்

[முகநூலில்]*

இந்த வருட விஷ்ணுபுரம் விருது ஏற்கும் கவிஞர் அபிக்கு அன்புகள்.நான் இல்லாமல் என் வாழ்க்கை
நான் இல்லாமலே
என் வாழ்க்கை
எதெச்சையில்
அருத்திரண்டதுமணிமொழி

மலேசியா[முகநூலில்]*2019ஆம் ஆண்டுக்கான ‘விஷ்ணுபுரம்’ விருது கவிஞர் அபிக்கு அளிக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.பொருள் பொதிந்த படிம அலங்காரத்திலும், உள்ளுறைந்திருக்கும் தொனி அழகிலும் மிகவும் விஷேசமான கவி. வார்த்தைகள் இணையும் அழகில் ஒளிரும் கவிதைகள் இவருடையவை.சிறு அங்கீகாரமும் கிடைக்கப் பெறாத மிக முக்கியமான கவி. பொக்கிஷங்கள் இருந்தும் அனுபவிக்கத் தவறும் துரதிர்ஷ்ட சமூகம் நம்முடையது.அபி கவிதைகள் குறித்த கவனக்குவிப்பை இந்த விருது ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையோடு, விஷ்ணுபுரம் விருது அமைப்பினருக்கு என் வணக்கங்கள்.அபிக்கு என் அன்பும் வாழ்த்துகளும்மோகன் செல்லச்சாமி

[முகநூலில்]

கவிஞர் அபி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது. சில அற்புதமான கலைஞர்களுக்கு எந்த விருது அளித்தாலும் அவர்களின் ஆளுமைக்கு அவ்விருதுகள் மிகச் சிறியனவாகவே தோன்றும்.
கவிஞர் அபி அவர்களின் உயரத்துக்கு பொருத்தமான விருது இவ்வுலகில் எதுவும் இல்லை.“உங்களுக்குப் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் உண்டா?” என்று அபியிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. (புதிய பார்வை,1999). அபி அளித்த பதில் அவரைப் பற்றிய சித்திரத்தை முழுமையாகக் காட்டும்.”அங்கீகாரத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்?”பெருங்கவி அபி அவர்களின் தாள் பணிந்து வாழ்த்துகிறேன்.ஜி குப்புசாமி

[முகநூலில்]

எழுதியவர் : மண்குதிரை, --ஜி.பி.இளங்கோவன (7-Aug-19, 4:46 am)
பார்வை : 28

மேலே