உனக்காக

ஓடும் நதியோரம்
உனக்காக

காத்திருக்க கால்
நீரில் அலையுதடா

உன்னைக் காண
மனம் விழையுதடா

சல சலக்கும்
ஓசையோட ஓடும்

நதிகூட நீ வருவாய்
என

சொல்லிப் போகுதட
ஆனால் நீ

வரக் காணோமேடா

தனித்து இருக்கும்
எனைப்பார்த்த

திரளும் மேகங்கள்
ஒன்றுகூடி

சதிசெய்து என்னை
நனைத்துப்

பார்க்க நினைக்குதடா

கொஞ்சம் என்னை நீ
நினைத்துப்

பார்க்கக் கூடாதாடா

வேடிக்கை பார்த்துப்
போன காற்று வந்து

கவலைவிடு நான்
இருக்கின்றேன் என்று

காதில் சொல்லிப்
போனதடா

அதன் ஆவேசத்தில்
நான்

கலைந்துப் போகக்
கூடாதடா

உனைக் காண ஓடி
வந்த எனை

நீ வந்து கூட்டிப்போக
கூடாதாடா

எழுதியவர் : நா.சேகர் (7-Aug-19, 8:25 pm)
Tanglish : unakaaga
பார்வை : 466

மேலே