பிக்பாஸ் - அதிரடி டாஸ்க்கும் அய்யய்யே டாஸ்க்கும்

காலையில பள்ளி எழுச்சிக்கு 'காசு... பணம்... துட்டு... மணிமணி' பாட்டைப் போட்டானுங்க... நான் சத்தமாய்ச் சிரிச்சிட்டேன். பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களைப் பார்த்து இல்லைங்க... வீட்டுக்குப் பேசும் போது மனைவி 'எப்பங்க வருவீங்க..?' என அவரின் பிரிவுத் துயரை வெளிப்படுத்த, விஷாலோ 'இப்பல்லாம் வரமாட்டாரும்மா... ரெண்டு வருசமாகும்' என்றான். 'ஏன்டா அப்படிச் சொல்றே..?'ன்னதும்

'காசு பணம் துட்டு மணி மணி

காசு பணம் துட்டு மணி மணி

போடுவேன்டா மேடையில கால மேல

குரங்கு கிட்ட மாட்டிகிட்ட சந்தன மாலை'



அப்படின்னு பாடி... இப்ப வர அவருக்கிட்ட காசு இருக்காதே... கடன்லயில்ல இருக்காருன்னான். அதே பாடல் பிக்பாஸ் பள்ளியெழுச்சியாய்... கொஞ்ச நேரம் சிரிச்சிக்கிட்டு இருந்தேன்.



லாஸ்லியா இன்னைக்கு லவ்லியா ஆடுச்சு... முகனும் சேர்ந்துக்கிட்டான்... நல்லவேளை அபி வரலை... படுக்கை அறையில் சாக்சி சாமி வந்த சவுந்தரக்கா மாதிரி ஆடிக்கிட்டு இருந்துச்சு... ஷெரின் ஒரு சிறு குலுக்கல்.... சாண்டி கால் மட்டும் ஆடுச்சு... எல்லாரும் காலைக் கடனை ஆடித் தீர்த்தார்கள்.



ஆங்கிலத்தில் பேசாதேன்னு பிக்பாஸ் சொல்லியும் நீங்க பேசுறீங்க அப்படின்னு ஷெரின் மற்றும் சாக்சிக்கிட்ட மது சொல்லிக்கிட்டு இருந்தாங்க... ஷெரின் கண்டுக்கலை... சாக்சி மட்டும் 'நீ ஒரு வார்த்தை பேசுறே... நான் ரெண்டு வார்த்தை பேசுறே'ன்னு சொல்ல, சாக்சிக்கு தண்டனையாக உக்கி போடச் சொன்னார். அவரும் சிரித்துக் கொண்டே போட்டார்... வில்லன்களும் வில்லிகளும் சிரித்தால் அதன் பின்னே உனக்கு இருக்குடி ஆப்பு என்ற வரி பதுங்கியே இருக்கும்... விரைவில் சாக்சியால் மது 'என் இறைவா...' என்று அழ இருப்பதைக் காணலாம்.



சித்தப்பாவைத் தொலைத்துவிட்டு சித்தம் கலங்கி நிற்கிறார்கள் அண்ணனும் தம்பியும்... தனியே அமர்ந்து புலம்பிக்கிட்டே சித்தப்பாவுக்கு ஒரு பாசப்பாடலை தயாரிக்கிறார்கள் சனிக்கிழமை கமல் முன் அரங்கேற்ற... இவர்களின் வேதனையும் வலியும் உண்மையாய் இருப்பது நட்பின் அடையாளம். மது உள்ளிட்ட மற்றவர்கள் தங்களின் அன்றாட வேலைக்குள் ஐக்கியமாகிவிட்டார்கள். கவின், சாண்டி தவிர மற்றவர்களுக்குச் சரவணன் அந்நியமாகிப் போனார்... தேம்பி அழுத மது எதுவும் நடக்காதது போல் இருப்பதில் தெரிந்தது முதல் நாளிரவு நடிப்பின் உச்சம்.



தர்ஷன் காய் நறுக்கிட்டு இருக்க, பக்கத்துல நின்னு பேசிக்கிட்டு இருந்த முகன் என்ன சமையல்ன்னு கேட்க, உருளைக்கிழங்கு காரக்குழம்புன்னு சொன்னதும் அருகே இருந்த சாக்சி 'உருளக்கெழங்... காரக்கொழம்ப்...' என விஜயைப் போல வார்த்தைகளைக் கடித்துப் பேச, உச்சரிப்பை சரி படுத்தினார்கள் முகனும் தர்ஷனும்... உடனே சாக்சி 'உருளக்கெழங்க்கு...காரக்கொழம்ப்பூ' அப்படின்னு ராப் டைப்பில் பாட, முகன் தாளமிட்டான்.



சாக்சி முதல் நாள் 'மனசு வலிக்குது அவ்வ... அவ்வா' பாடினதைக் கேட்டு பரவசநிலையில் இருந்த நமக்கு இந்தப்பாடல் 'ஆத்தா போதுந்தா... ஐயாவுக்கு இதயம் பலவீனமாயிருக்கு'ன்னு யாராவது வந்து சொல்லமாட்டாங்களான்னு தோணுச்சு... இந்த ஆட்டத்துக்கு அபி அங்கிட்டு வரலை... வந்திருந்தா 'காரக்கொழம்பாடி... உங்காலை ஒடிக்கிறேன்டி'ன்னு அடிச்சி நொறுக்கியிருப்பாங்க... அப்புறம் சாக்சிக்கு அவ்வ்வ்வ்தான்.



அப்புறம் 'தன் கையே தனக்கு உதவி' டாஸ்க் ஆரம்பம்... பேரு வச்சிருக்கிறான் பாருன்னு யாரோ ஒரு பெண் போட்டியாளர் சொன்னது காதில் விழுந்தது. ரெண்டு ரெண்டு பேரா அணி பிரிஞ்சி, காயினை எதிரணியினர் மீது ஒட்டணும்... போட்டி முடியும் போது யார் கையில் காயின் இருக்கோ அந்த அணியில் இருக்கும் இருவரின் மதிப்பெண்ணில் 50% பனால். சாக்சி-லாஸ், கவின்-சேரன், தர்ஷன்-சாண்டி, அபி-மது, ஷெரின்-முகன் என அணிகள் பிரிக்கப்பட்டு ஆட்டத்துக்குத் தயாரானார்கள்.



மணி ஒலித்ததும் ஒருத்தரை ஒருத்தர் விரட்டி ஓடுனாங்க... கவின் நீச்சல்தொட்டியைத் தாண்டியெல்லாம் ஓடினான். சேரனும் விரட்டி விரட்டி ஓடினார்... லாஸ்லியாவின் காலைக் காலி பண்ணினான் கவின்... ரெண்டு பொண்டாட்டிக்காரன் நிலையில் கவின் தப்பித்து ஓட அக்கா, தங்கச்சி ரெண்டு பேரும் விரட்ட, குதித்தவன் குப்புற விழுந்தான்... தங்கை லாஸ்லியா 'டேய் அடிபட்டிருச்சா..?' என விசாரித்து நிற்க, அக்கா சாக்சியும் 'ஆர் யூ ஓகே பேபி'ன்னு நெஞ்சைத் தட்டி ஐஸை மெல்ல இறக்கினார். ஆத்தாடி போதும்டி உங்க கரிசனம்... விட்டுட்டு வெளாட்டைப் பாருங்கடி... அப்புறம் கவின் கெட்டவன்னு கதை கட்டிருவீங்கன்னு விரட்டிட்டு வலிக்கு ஜஸ் வைத்தான்.



சாண்டி-தர்ஷன்தான் நம்ம இலக்கு என முடிவெடுத்து அதன்படி விளையாட ஆரம்பிக்க, சேரன் சோர்வான நிலையில் காயின் அவர் கையில்... காத்திருந்த பிக்பாஸ் மணியடிச்சி.... சேரன், கவினின் சேமிப்பில் 50% எடுத்துக் கொண்டார்... சேரன் மயங்கினார்.... லாஸ் நொண்டினார்.... கவின் காலைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். எல்லாரும் 'அஸ்ஸூ புஸ்ஸூ'ன்னு மூஸ்ஸூ விட்டார்கள். லாஸ் சேரப்பாவை நலம் விசாரித்து கவினுக்கிட்ட காதலோட போச்சு... ஆத்தாடி அவ போறாளேன்னு அங்க சாக்சியும் வந்துச்சு... கவின் கல்லுப்பிள்ளையாராய் மாறிட்டான்.



இந்த விளையாட்டில் ஓட்டத்தின் வேகம் சேரனை எல்லாம் தூக்கி வீசிருமோன்னுதான் தோணுச்சு. நல்லவேளை அவர் பிழைத்துக் கொண்டார். போட்டி முடிவில் சாண்டி, தர்ஷன், மது முன்னணியில் இருந்தாங்க.



'அண்ணே... நான் விழுந்ததுல ஒரு டவுட்டு இருக்கு' எனச் சாண்டியிடம் சொன்னான் கவின்.



'இதுல என்ன டவுட்டு... அதான் வந்தோடனே அபிக்கிட்ட... அப்புறம் சாக்சி... பின்னே லாஸ்... இப்ப இருக்கிறது ஷெரினும் மதுவும்... மதுவுக்கு மணமாயிருச்சு... ஷெரின் மட்டும்தான் இருக்கா... இதுல என்னடா டவுட்டு... அவளுக்கும் நூல் விடு...'



'அண்ண்ண்ணே...'



'பின்ன என்னடா டவுட்டு... ஏதோ ஒரு புது வரவு இருக்காம்... அதுக்கு நூல் விடலாம்ன்னு நினைக்கிறியா...?'



'சொல்றதைக் கேளுண்ணே.... நான் ஓடுனேனா... லாஸ் துரத்தினாளா.... அப்ப சாக்சி அங்கிட்டு வந்தாளா... இங்கயிருந்து தாண்டுனேனா... குதிச்சிட்டேன்னு நினைச்சேன்... அங்கிட்டு விழுந்து கிடக்கேன்...'



'என்னடா மீரா மாதிரி பேசுறே...?'



'அதாண்ணே... உங்களுக்குப் புரியுதா... நான் ஓடுனேனா... லாஸ் துரத்தினாளா...'



'அடேய் நிறுத்து... மீரா போன பின்னாடிதான் என் காது கிர்ர்ருங்கிறது நின்னிருக்கு... மறுபடியுமா...?"



'அய்யோ அண்ணே... இதுக்குத்தான் சித்தப்பு வேணுங்கிறது... எல்லாத்தையும் கேட்டுட்டு ஒன்லைன்ல பதில் சொல்லிட்டுப் போயிரும்.. நீ வேகமா ஆடுவே இல்லாட்டி கோபமாப் பேசுவே..'



'சரி கொல்லு... சை சொல்லு...'



'எனக்கென்னவோ சாக்சி தள்ளிவிட்டிருப்பான்னு தோணுது...'



'அவ தள்ளி நீ விழ... அடேய்... மூணு பேரை தள்ளுனவன் நீ... உம்பின்னாடி லாஸ்தானே வந்தா... பின்ன எப்படி சாக்சி தள்ளுனான்னு சொல்றே... ஒரு நியாயம் வேண்டாம்... குறும்படம் போட வச்சிடாதேடா...'



'ஆமால்ல...தன் கையே தனக்கு உதவின்னு சொல்லிட்டு எனக்கு நானே ஆப்பைப் செதுக்கி வச்சிப்பேன் போல' என வாயை மூடிக் கொண்டான் கவின்.



எல்லாருமா பேசிக்கிட்டு இருக்கும் போது கவின் 'சித்தப்பு மூக்குல ஏதோ ரத்தம் வர்ற மாதிரியிருக்குன்னு சரவணன்கிட்டச் சொன்னதுக்கு கையைக் கழுவிடு போயிரும்ன்னு சொன்னார். அதான் சித்தப்பு... சிரிக்காம பதில் சொல்லி எல்லாரையும் சிரிக்க வைப்பார்' என்றதும் சேரன் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர். மிஸ் யூ சரவணன்.



அப்புறம் டாஸ்க்கோட இறுதிச் சுற்று சிவப்புக்கலர் தண்ணீர் நிறைந்த தொட்டிக்குள் கிடக்கும் காயினில் ஒன்றை எடுத்து அதில் எழுதியிருப்பதை வைத்து மற்றவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கும் நபரின் காயின் மதிப்பைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்... இதில் பெரும்பாலும் சாண்டிதான் இலக்கானார்.... அடுத்து தர்ஷன்... பின்னே ஷெரின்.... ஒரு வழியாக இந்த வார லக்ஸூரி டாஸ்க் முடிவுக்கு வந்தது.



கவின் காயினை எடுக்கும் போது எதுவுமே இல்லாத காயினாய்... என்ன குருநாதா..! எனக்கு இதுலயும் ஒண்ணுமில்லையா என வேதனை கலந்த சிரிப்போடு கேட்டது பாவமாய் இருந்தது.... கேமரா சாக்சியையும் லாஸையும் காட்ட, லாஸைவிட சாக்சிதான் பற்கள் தெரியச் சிரித்தார்.



முடிவு அறிவிக்கும் போது மது, அபிராமியின் மொத்த மதிப்புக்களில் பிக்பாஸ் குழம்பிட்டார் என்றே தோன்றியது. தவறான மதிப்பிடல்தான்... சாக்சி முதலிடம்... இந்த வாரம் வீட்டுக்குப் போகாத பட்சத்தில் அடுத்த வாரம் நாமினேசனில் வரமாட்டார். அபி இரண்டாம் இடம்... மது மூன்றாம் இடம்... மதுவுக்கு முகத்தில் குழப்பம் போகலை... பிக்பாஸ் சொல்லிட்டா எதுக்கவா முடியும்ன்னு பேசாம உக்கார்ந்துட்டார்.



அடுத்த தலைவர் போட்டியில் செமையா விளையாடணும்ன்னு அபியும் சாக்சியும் கக்கூஸ்க்குல தீர்மானம் போட்டுக்கிட்டு இருந்தாங்க... முகன் பஞ்சாயத்துத் தவிர மற்ற நேரத்தில் இருவரும் இணைந்த கைகள்தான்.



பால்நிலா வெளிச்சத்தில் பள்ளிகொண்ட பார்வதியாய் அபி... பக்கத்தில் அமர்ந்து காதல் கணை வீசும் சிவனாய் முகன்... காதலை குழைந்து சொல்லிய அபியிடம் மண்டைவலி எனச் சொல்லி எனக்கு இதில் உவப்பில்லை என்றான் முகன். நீ ஏத்துக்கணும்... இல்லை உன்னை லவ்வுற உங்க ஊர்க்காரி விட்டுக் கொடுக்கணுமின்னு எல்லாம் சொல்லல... ஆனா நான் உன்னைக் காதலிக்கிறேன்... ரொம்ப ரொம்பக் காதலிக்கிறேன்னு அபி லவ் மூடோட சொன்னாங்க... அழும் போது பார்க்கச் சகிக்காத முகம் காதலைச் சொன்னபோது பௌர்ணமி நிலவாய்.... காதல் எந்த முகத்தையும் அழகாக்கி விடுகிறது இல்லையா..?



கூட்டிக் கழித்துப் பார்த்தால் எப்படியும் ஒரு சில வாரத்தில்

'அபிராமியே! தாலாட்டும் சாமியே! நான் தானே தெரியுமா



சிவகாமியே! சிவனில் நீயும் பாதியே! அதுவும் உனக்குப் புரியுமா

சுப லாலி லாலியே லாலி லாலியே!

அபிராமி லாலியே லாலி லாலியே!'

அப்படின்னு பய பாட ஆரம்பிச்சிருவான்னு தோணுது.



வீட்டுக்குள்ள தர்ஷனுடன் ஓடிப்பிடித்து விளையாண்ட சாக்சியைப் பார்த்து, 'இதே முகனுடன் இப்படி விளையாட முடியுமா..? அப்படி விளையாண்டால் அபி உண்டு இல்லைன்னு பண்ணிறாது... முகன் விஷயத்தில் அபி ரொம்ப அதிகமா ஈடுபாடு எடுத்துக்கிது... இதெல்லாம் ரொம்பவே அதிகம்... காதல் இல்லைன்னு அவன் சொன்னாலும் எனக்குள்ள இருக்குன்னு காட்டிக்கவே இதெல்லாம் பண்ணுது'ன்னு சேரனும் மதுவும் பேசிக்கிட்டு இருந்தாங்க.



அப்புறம் ஒரு உப்புச் சப்பில்லாத டாஸ்க்....



பெண்கள் ஆண்களாய் மாறி நடிக்க வேண்டும்... சேரனாய் மாறிய மதுவும் முகனாய் மாறிய அபியும் நல்லாச் செய்தார்கள்... சாக்சி சாண்டியாய் பரவாயில்லை... லாஸ்லியா தர்ஷனாய் மாறி நடிக்கச் சொன்னா கவின் கூட கடலை போடுது.. ஷெரின் கவினாய் நின்னுச்சு... முடிவுல மதுவும் அபியும் ஜெயிச்சாங்க.



அபியும் முகனும் மீண்டும் தனிமையிலே இனிமை காண வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.



மதுவைப் பற்றி புறம் பேச ஆரம்பித்தார் அபி...



தன் கை வளையத்தை ஏத்தி விட்டான் கவின்....



ஆத்தி எதுல குத்துவான்னு தெரியலையேன்னு தள்ளி உக்காந்துக்கிச்சு அபி...



எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கடையை மூடினார் பிக்பாஸ்.



இன்னைக்கு கஸ்தூரியை களம் இறக்குறானுங்க போல... சாக்சிக்கு டப் பைட் காத்திருக்கு..

அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்...

அலையோடு சிந்து படிக்கும்...



பிக்பாஸ் தொடரும்

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (8-Aug-19, 6:20 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 80

மேலே