நீ இல்லா நொடிகள்

நீ இல்லா நொடிகள்

வெப்ப பிரதேச
பாறைவெடிப்புகளாய் என் இதயம்

ஒவ்வொரு நொடியும்
மழைதுளியாய் விழுந்தாலும்
வெள்ளத்தில் சிக்கிய ஈசலாய் மனம்

எல்லா ரோஜா செடியிலும்
முட்களை மட்டும் காணும்
என் கண்கள்

அறுத்து எடுத்த
ஆட்டுக்குட்டியின் இதயத்தின்
துடிப்பாய் என் உடல்

மழை நிரம்பிய வீதிகளில்
உணவு கிடைக்காது
ஒன்றி நிற்கும் பூனையாய் நான்

நீரோடை அருகில் இருந்தும்
உறிஞ்சி உயிர் வாழமுடியாத
செடியாய் உணர்வற்று கிடக்கிறேன்

குளிர்ந்த காற்றும்
கொதிக்கிறது எனக்கு

விருந்தின் வரிசையில்
உணவை ஒதுக்கிவிட்டு
இலையை மட்டும் பார்க்கிறது
என் கண்கள்

தாகம் தீர்க்க தண்ணீர்
அருந்தும்போதே வியர்வையாய்
வெளியேறுகிறது

மலர் கண்காட்சியில்
சிரிக்கும் பூக்களை பார்த்து
அழுது கொண்டிருக்கிறேன்

மிதியடி இருந்தும்
சுடு மணலில் வெறும்காலோடே
நடக்கிறேன்

ஆனாலும் உயிரோடே
இருக்கிறேன் உன்னை
காண்பேன் என்ற நம்பிக்கையில்

எழுதியவர் : இளவல் (9-Aug-19, 11:59 am)
சேர்த்தது : இளவல்
Tanglish : nee illaa nodigal
பார்வை : 405

மேலே