அறிந்து செய்யும் பிழையோரை

தேடிக் கொளல் வேண்டும் - தினமும்
உழைத்து உண்ணல் வேண்டும் - பாடுபடும்
எதிலும் நல்ல பலன் கொளல் வேண்டும் - வீணர்
உறவை என்றும் விலக்க எண்ணம் வேண்டும்.

காணும் உயிரின் பால் இறையை உணர வேண்டும்
மனதில் கவலையை நீக்க வேண்டும்
மதியில் மறதி களைய வேண்டும் - பொருளின்
சேர்க்கையோடு பொறுமை மிக்க வேண்டும்

தவறு செய்தோர் கருத்தை தவறாமல் கேட்க வேண்டும்
தகுந்த தண்டனையோடு தண்டிக்க மனம் வேண்டும்
தர்மசிந்தனையோடே தணிகின்ற சினம் வேண்டும்
அறிந்து செய்யும் பிழையோரை அழிக்க துணிவு வேண்டும்

அறிவியலைத் துணைக் கொளல் வேண்டும்
ஐம்பூதங்களின் அருமை உணர வேண்டும்
அனைத்து உயிர் நலன் பேணல் வேண்டும்
ஆபத்தில்லாமல் அகிலத்தை காக்க வேண்டும்
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (9-Aug-19, 7:29 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 57

மேலே