கவிஞர் இரா இரவி அவர்களின் படைப்பாற்றல் நூல்ஆசிரியர் முனைவர் நசெகி சங்கீத்ராதா நூல் விமர்சனம் செல்வி இர ஜெயப்பிரியங்கா

கவிஞர் இரா. இரவி அவர்களின் படைப்பாற்றல்.....

நூல்ஆசிரியர் : முனைவர் .ந.செ.கி. சங்கீத்ராதா.

நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.

வெளியீடு :அண்ணாமலை பல்லைக் கழகம் சார்பாக கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை,
தியாகராய நகர், சென்னை - 600 017.
விலை : ரூ. 90 பக்கங்கள் : 102



கவிஞர் இரா. இரவி அய்யா அவர்;கள் எனக்கு குரு அவர்; 2015-ல் தினமலர் நாளிதழில் எழுதிய ‘கவிதை எழுதுவோம்’ என்னும் கட்டுரையே முதன் முதலாக என்னை கவிதை எழுத ஊக்கப்படுத்தியது. கவிஞர் இரா. இரவி அவர்;கள் மதுரை விமான நிலையத்தில் உதவி சுற்றுலா அலுவலராக பணியாற்றிக் கொண்டே தம் இலக்கிய பணியும் ஆற்றிவருகின்றார்.

இணையம், வலைப்பூவின் ஆசிரிpயராக இருந்து கவிதை கட்டுரை நூல் விமர்சனங்களை எழுதி வருகின்றார். கவிஞர்; இரா. இரவி அவர்களின் பதினைந்து நூல்களை ஆய்வு செய்து நூல் ஆசிரியர் திறனாய்வு செய்துள்ளார்; .திறனாய்வு நூல் பனிரெண்டு தலைப்புகளில் உள்ளது. நூலின் அறிமுகத்தில் கவிஞரின் குடும்பம், அலுவலக இலக்கிய கல்வி சமூகப் பணிகளும் கவிஞர் பெற்ற விருதுகளும் இடம் பெற்றுள்ளன.

படைப்புலகம் பகுதியில்,

கவிஞரின் படைப்புக்கள். ஹைகூ தோற்றம் ஹைகூவும் கவிஞரும், அணிந்துரைக்கு அணி செய்தவர்கள் கவிஞரின் படைப்புகள் ஒரு பார்வை இடம்பெற்றுள்ளது.

தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றி நூல்

உலகின் தொன்மையும் செம்மையும் வாய்ந்த தமிழ்மொழி
மனித நேயத்தை முன்மொழியும் மொழி தமிழ்மொழி
மனிதனை மனிதனாக மதிக்கும் நல் தமிழ்மொழி!

தமிழர் பற்றி நூல்

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
ஆங்கில கையொப்பம் ஏனடா?

‘பாரதி இன்று இருந்திருந்தால்’ என்ற தலைப்பில் கவிஞர் எழுதியுள்ள சமுதாய அவலங்கள்.

காவேரி நீரை தர மறுக்கும் கயவர்களின்
கன்னத்தில் அறைந்து இருப்பார்.
கேரளா அணை நீரை உயர்த்த மறுக்கும்

தன்முன்னேற்றச் சிந்தனை:

‘தன்னம்பிக்கை என்பது என்றும் நமக்கு துணையாக இருப்பது. தோல்வியின் படிகள் யாவும் வெற்றிக்கு நாம் இடும் உரம் போன்றது’ என்பதை நூல்

‘அவநம்பிக்கையோடு இருக்காதே
அகத்தில் நம்பிக்கை பெற்றிடு.’ (கவியமுதம்)

இமயம் செல்லாம்
இரு கால்களும் இன்றி
நம்பிக்கை இருந்தால் (விழிகளில் ஹைக்கூ)

மேதகு அப்துல்கலாம்;:

‘தூக்கத்தில் வருவதில்லை கனவு
தூங்கவிடாமல் செய்வதே கனவு’
என்னும் தாரக மந்திரம் கொண்ட கலாம் பற்றி நூல்

‘மூன்றிலும் முரண்பாடு இல்லை
பேச்சு எழுத்து செயல்
கலாம்.’

‘திருமணம் விரும்பாத
திருமனம் பெற்றவர்
கலாம்.’

‘மாணவா;களை நேசித்த
மாபெரும் பேராசிரியர்
கலாம்.’

‘உலக அரங்கில்
உயர்ந்து நின்றவர்
கலாம்.”

இன்றைய சூழலில் மனிதர்;கள் மறந்தும் மறைந்தும் வருவது வாழ்வியல் விழுமியங்கள் பற்றி நூல்

அரசியல் அவலம்
அமைச்சா; வருகை
நூறு காரில் பவனி

எரிபொருள் சிக்கன விழா!

மன்னராட்சியையும் வென்றார்கள்
அரசியல் வாதிகள்
குடும்ப அரசியல!;

வறுமை

‘நம் தமிழ்நாட்டில் வறுமை தலைவிரித்தாடுகின்றது’ இது பற்றி நூல்

‘கற்கும் வயதில்
விற்கும் கொடுமை
கருகும் மொட்டு”!

“அணில் கோடு
வறுமைக் கோடு
அழிவதே இல்லை”!

கல்விநிலை:

‘இன்றைய கல்விமுறை வணிகமாக உள்ளது’ இது பற்றி நூல்

ஆரம்பமானது

பகல் கொள்ளை
கல்வி நிறுவனங்கள்!

குடி;

‘குடி பழக்கம் உடல்நலத்தை கெடுக்கும்’ என்பது பற்றி நூல்

‘விதவைகளின் எண்ணிக்கை
விரிவாக்கம் செய்யுமிடம்
டாஸ்மாக்’!

இயற்கை சித்தரிப்பு

பள்ளம் நிரப்பும்
பொதுவுடைமைவாதி
மழை!

தலைநகரை
தண்ணீர்; நகரமாக்கியது
மழை!

முற்போக்குச்சிந்தனை :

‘தீண்டாமைக் கொடுமை’ பற்றி நூல்

இதயம் சுடுகிறது
இருபத்தியோராம் நூற்றாண்டிலும்
தனிக்குவளை!

மூடநம்பிக்கை

ஆறுகால பூஜை
ஆலயத்தில் கடவுளுக்கு
பட்டினியில் மனிதன்!

‘பெண்ணடிமைதனம்’ பற்றி நூல்

‘பாட்டி தாத்தாவிற்கு
அம்மா அப்பாவிற்கு
தொடரும் பெண்ணடிமைத்தனம்!’

பெண்கல்வி

‘பெண்களுக்கு
படிப்பதற்கு சொன்னவனை
செருப்பால் அடி!”

‘மொழி ஆளுமை’ பற்றி நூல்

‘சுவரில் எழுதாதே
சுவர்; முழுவதும்
எழுதியிருந்தது!

‘நகைச்சுவை உணர்வு அனைவருக்கும் இருக்கும் ஒன்று’ அது பற்றி நூல்

‘அடி வயிற்றில்
இடி விழுந்தாற்போல்
அண்ணா என்றாள்’

;சுனாமி வருவதாக
மருமகள்கள் பேச்சு
மாமியார்; வருகை

என்று நூல் நகைச்சுவை கருத்துக்களை முன்வைக்கின்றது. நூலின் இறுதியாக கவிஞர் இரா. இரவி அவர்களுடனான நேர்;முகம் இடம்பெற்றுள்ளது. கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக விளக்கி நிற்கும் செம்மை பொருந்திய நூல்

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (9-Aug-19, 9:00 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 96

மேலே