திருக்குற்றாலம் பதிகம் 4 - கலிநிலைத் துறை

குற்றாலநாதரைப் பற்றி புகழ்ந்து திருஞான சம்பந்தர் குறிஞ்சிப் பண்ணில் 11 பதிகங்கள் (கலிநிலைத் துறை) பாடியுள்ளார்.

கலிநிலைத் துறை
(மா மா விளம் மா காய்)

பக்கம் வாழைப் பாய்கனி யோடு பலவின்தேன்
கொக்கின் கோட்டுப் பைங்கனி தூங்குங் குற்றாலம்
அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டோர் அனலேந்தும்
நக்கன் மேய நன்னகர் போலும் நமரங்காள். 4

பதவுரை:

பாய்கனி - பரவிய பழம்,
கொக்கு – மா,
நக்கன் - ஆடையில்லாதவன்.

பொருளுரை:

மலையின் பக்கங்களில் எல்லாம் பரந்து, வளர்ந்துள்ள வாழை மரங்களின் கனிகளோடு பலாவின் பழங்களிருந்து ஒழுகும் தேனும் மாமரக் கிளைகளில் பழுத்த பசுமையான நறுங்கனிகளும் ஆய முக்கனிகளும் அந்தந்த மரங்களில் காய்த்து, கனிந்து தொங்கும் ஊர் குற்றாலம் ஆகும்.

எலும்பு மாலை, பாம்பு, ஆமை ஆகியவற்றை அணிந்து, கையில் அனலை ஏந்தியபடி, திருத்திய ஆடையின்றித் தோன்றும் சிவபெருமான் எழுந்தருளியுள்ள நன்னகராகும் இது எனத் தெரிந்து கொள்வோம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Aug-19, 8:24 am)
பார்வை : 58

சிறந்த கட்டுரைகள்

மேலே