காதல்
தென்றலைத் தேன் தென்றல்
பூந்தென்றல் என்றெல்லாம்
கூறி அழைக்கின்றோம் தென்றல்
என்ன பொருளா தேனாய்த் தித்திக்க
தென்றல் என்ன மலரா பூந்தென்றல்
என கவிஞன் எழுத ……
காற்றைப் பார்க்க முடியாது
உணர முடியும்… தேனாய், மலரின்
மென்மையாய் , இந்துவின் குளிராய்,
இந்த உணர்வு பலருக்கு பல விதமாய்
…….. இருக்க தென்றல் மட்டும்
காணமுடியா உணர்வாய் இருக்கிறது
காதலும் ஒரு பொருளல்ல உணர்வு
அது தித்திக்கும் தீங்கரும்பாய்
மணக்கும் மல்லிகைப்பூவாய் ஏன்
ஊடலில் காதல் கசந்திடுமே வேம்பாய்
தென்றலுக்கு உருவமில்லை, காதலுக்கும்
கடவுளுக்கும் உருவமில்லை
காதல் அதனால் தெய்வீகம்