பூனையோடு சாட்டிங் - ஓய்வின் நகைச்சுவை 213

பூனையோடு சாட்டிங்
ஓய்வின் நகைச்சுவை : 213

லக்ஷ்மி: என்னடி! எப்படி இருக்கே. பிரீயா பேசலாமா? ஆர் எம் (ரெட்டீர்யார்ட் மேன் ) வீட்டுலே இல்லையே?
சாந்தி: அவர் எங்கே போவார்? பின்னாலே பூனையோடு சாட்டிங் பண்ணிண்டிருக்கார்.
லக்ஷ்மி: என்னடி சொல்கிறே? பூனையோடு சாட்டிங் பண்ணிண்டிருக்காரா?
சாந்தி: ஆமாண்டி அடிக்கடி டைம் பாஸுக்கு அதோட பேசிண்டிருப்பார். இவர் பேசுறது, அதுக்குப்புரியாது அது பேசுறது இவர்க்கு புரியாது. ஆனால் புரிஞ்ச மாதிரி இரண்டு பேரும் சந்தோஷமாயிடுறாங்க. மொத்தத்திலே மனுஷன் சந்தோஷமாயிருக்கார். அம்புடுதான்
லக்ஷ்மி: ஆ...மா....... நாய் பூனையோடெல்லாம் சிரிச்சு சிரிச்சு பேசுவா நம்மிட்ட பேசுறச்சே மட்டும் பொரிஞ்சு தள்ளிடுவா. எல்லா ஆர்.எம்மும் ஒரே ராகம் தான். வந்த விஷயத்தை மறந்துட்டேனே

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (11-Aug-19, 7:24 am)
பார்வை : 147

மேலே