ரகுவும் சில மனிதர்களும் 5

சில நாட்கள் கழித்து ரகுவின் வாட்ஸப் நம்பருக்கு ஸ்வேதா குறுஞ்செய்தி அனுப்பினாள்.."சார்.என்னை மன்னிச்சுக்கோங்க.என்னாலதான் நீங்க காலேஜ்கு வரலன்னு எல்லாரும் என்னை திட்டுறாங்க..உங்க க்ளாஸ் பசங்கலாம் என்னைப் பார்த்தாலே கடிஞ்சு கொட்டுறாங்க."எங்களுக்கு தெரியாத பாடத்தையெல்லாம் அண்ணா சொல்லிக்கொடுத்தார்.நீ அவர விரட்டிவிட்டுடன்னு"அந்தப் பசங்க கோபிக்கிறாங்க...நீங்க ரெகுலரா காக்காய்க்கு சாதம் வைப்பீங்கலே அந்த இடத்துல சதா நாலஞ்சு காக்கா வந்து கத்திக்கிட்டே இருக்கு சார்.லைப்ரரில இப்போ யாரையுமே அனுமதிக்கிறது இல்ல..ப்ளீஸ் சார்.காலேஜ்கு வாங்க.நான் வேணும்ணா காலேஜ்ஹ விட்டு நின்னுடறேன்" என்று செய்தி அனுப்பினாள்..இதைப்பார்த்த ரகு பதிலளித்தான்."ஸ்வேதா உன்னால நான் காலேஜ்கு வராம நிக்கலமா.நான் வீடு கட்டினு இருக்கேன்.இந்த சமயத்துல கொஞ்சம் பிஸினஸ்ஸ பார்க்கவேண்டியது கட்டாயம்...நான் மாசத்துக்கு 2 நாள் வரேன்.அந்த காக்காவுக்கு இனிமே நீ சாதம் வச்சுடு எனக்காக"என்று அனுப்பினான்...ஒருநாள் ஸ்வேதா கேட்டாள்."சார் நான் கேட்கிறேன்னு திட்டக்கூடாது சார்...ரேணு எங்க இருக்காங்கனு உங்களுக்குத் தெரியுமா..? அவங்க வீட்டுக்காரர் என்ன வேலை செய்யுறார்..அவங்களுக்கு குழந்தை பிறந்துருச்சா..?"
ரகு: எனக்குத் தெரியல ஸ்வேதா..நான் அவளப்பத்தி விசாரிக்கவே முயற்சிக்கல..நான் அவள மறக்க முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்..அவ என்னை மறந்து எங்கேயோ வாழ்ந்துனு இருக்கா.அவ நல்லா இருக்கட்டும்னு நான் தினமும் கடவுளை வேண்டுறேன்.அவ்ளோதான் எனக்கு தெரியும்..
ஸ்வேதா:சரி சார்...அவ்ளோ நேசிச்சாங்கண்ணு சொல்றீங்க.உங்களப்பத்தி அவங்க யோசிக்காம எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க..?நீங்க நல்லா இருக்கட்டும்னு அவங்க நினைக்கலையே சார்..உங்களுக்காக அவங்க கடவுளை வேண்டுவாங்களானும் தெரியலயே..கண்டிப்பா அவங்க குடும்பத்தோட அவங்க சந்தோஷமாத்தான் இருப்பாங்க..நீங்கதான் துரோகம் பன்னிட்டேன் தண்டனை அனுபவிக்கிறேன்னு வாழ்க்கைய நாசம் பன்னிக்கிட்டு இருக்கீங்க..
ரகு: அவளும் சராசரி பொண்ணுதான ஸ்வேதா..! என்னைப்பத்தி யோசிக்கிறதவிட அவங்க அப்பா அம்மா சொந்தபந்தத்தப்பத்தி அதிகம் யோசிச்சிருக்கலாம்.நிலையில்லாம மாறிமாறிப் பேசுற இவன கட்டிக்கிட்டா விட்டுட்டுப் போய்ட்டா என்ன பன்றதுன்னும் யோசிச்சிருக்கலாம்.."நீ மாறிமாறிப் பேசுற என்ன கல்யாணத்துக்கப்புறம் விட்டுட்டுப் போய்ட்டினா என்ன பன்றது நான்"அப்டினு அவளும் ஒருமுறை என்னைக் கேட்டிருக்கிறாள்...அவளை கல்யாணம் பண்ணா எண்ணை ஊத்தி கொளுத்திக்குவேன்னு சொல்ற அம்மா..அவங்க வீட்டுக்கே வீட்டோட மாப்பிள்ளையா போய்டு இனி எனக்கு ஒட்டும் வேணா உறவும் வேணாம்னு சொன்ன அப்பா..கல்யாணமே பன்னாலும் உன்னையும் அந்தப்பொண்ணையும் ஜாதில சேர்த்தமாட்டோம்னு சொன்ன சொந்தங்கள்..அமைதியா கல்லா உட்கார்ந்துகிட்ட கடவுள்னு எல்லாரும் எனக்கு துரோகம் செஞ்சுட்டாங்க...நான் வேணாம் விட்டுடுன்னு சொன்ன ஒரே வார்த்தை போதும்..அவளுக்கு என்மேல ஆயுள் தாண்டியும் கோபம் நீடிக்கும்..வீட்ட விட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ண எனக்கு தைரியம் இருந்தாலும் அவளுக்கு அதுல விருப்பம் இல்ல..நான் சூழ்நிலைக் கைதியா நின்னேன்..அவ மறுபடி என்கிட்ட பேசியிருந்தா எல்லாமே மாறியிருக்கும் ஸ்வேதா...ஆனா அவ பேசவேயில்ல...அவளுக்கு கல்யாணம்னு மட்டும் என்னோட அம்மாவுக்கு அந்த ஊர்ல இருக்கிற சொந்தக்காரர் சொன்னார்..அத ஸ்பீகர்ல கேட்டேன்..அவ்ளோதான்...காதலிக்கு கல்யாணம் என்ற செய்தியைக் கேட்பது எவ்ளோ கஷ்டமானதுனு உனக்கு தெரியுமோ தெரியாதோ..நான் நரக வேதனைய அனுபவிச்சேன்..மனசுல இருந்து சிரிச்சு ரொம்ப காலம் ஆகுது...நிம்மதியா தூங்கி 2 வருஷம் ஆகுது...அவ எங்கயோ குடும்பத்தோட என்னை மாதிரி கஷ்டப்படாம நிம்மதியா சிரிச்சு நல்லா தூங்கி வாழ்ந்தா போதும்..அவளாவது நிம்மதியா இருந்தா போதும் ..எப்பயாவது அவள அவ குடும்பம் குழந்தையோட தூரத்திலிருந்து பார்த்தா போதும்..நான் நிம்மதியா தூங்குவேன்..
ஸ்வேதா: சார்.என்ன சொல்றதுன்னே தெரியல சார்..கண்டிப்பா நீங்க அவங்க நல்லா இருக்கிறத பார்ப்பீங்க..கடவுள்கிட்ட நானும் வேண்டிக்கிறேன் சார்..ஆனா நீங்க மனநிலைக்கு சாந்தம் கொடுங்க சார்...அம்மா ஏன் சார் இப்படி பன்னாங்க..?உங்க ப்ரண்ட்ஸ்லாம் உங்க காதலப்பத்தி இப்படி உயர்த்தி பேசுறாங்க..அவங்களுக்கு ஏன் அவ்ளோ பிடிவாதம்..
ரகு: எல்லாமே கர்மவினை மா..அம்மா அவங்களோட மாமா பையனை விரும்பினாங்களாம்...ஆனா தாத்தா ஒத்துக்கலையாம்..கடைசில இதேபோல அம்மா வீட்டைவிட்டு வரமாட்டேன் தாத்தா சொல்ற பையனையே கட்டிக்கிறேன்னு சொல்லி அப்பாவைக் கட்டிக்கிட்டாங்களாம்..அதனால நல்லா இருந்த அவங்க மாமா பையன் குடிகாரராகி நாற்பது வயசு வரைக்கும் கல்யாணமே ஆகாம இருந்து அவர் வாழ்க்கையே வீணாகிடுச்சு..அந்த கர்மவினைதான் என்னோட வாழ்க்கைய அவங்களே கெடுக்குற நிலைமைக்கு மாத்தியிருக்கு...இப்போ உன் வாழ்க்கைய நானே கெடுத்துட்டேன்.உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்குறேன்னு என்கிட்ட சொல்றாங்க..கால்ல விழுந்தா என்ன போன வாழ்க்கை திரும்ப வருமா.இல்ல நான் பட்ட வேதனை மறைஞ்சுபோகுமா.?இல்லவே இல்ல...வேறொரு பொண்ண நான் கல்யாணம் பண்ணாலும் அந்த கர்மவினை என்னை விடாது...எதுக்கு இன்னொரு பொண்ணையும் அவங்க குடும்பத்தையும் இதுல இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கனும்..நான் மட்டுமே எல்லா துன்பத்தையும் தனியா இருந்து அனுபவிச்சுக்கிறேன்னு கடவுள்கிட்ட அடிக்கடி வேண்டிக்குறேன்...
ஸ்வேதா:சார் நீங்க பாட்டுக்கு எதுக்கு எதையோ முடிச்சு போடாதீங்க சார்.அதெல்லாம் உண்மை இல்லை..உங்களுக்கெல்லாம் அந்த நிலைமை வராது..உங்களோட இலட்சியம் பெரிசா இருக்கும்போது அத நீங்க அடையும்போது கண்டிப்பா உங்க மைண்ட்செட்க்கு தகுந்த பொண்ணு கிடைப்பாங்க..சரி சார் உங்க இலட்சியம் என்னதான் சார்.எனக்கு மட்டுமாவது சொல்லுங்க..அந்த லட்சியம் வரக் காரணம் என்ன..?
ரகு:ஒருமுறை நான் கோவைக்கு ஒரு மீட்டிங் போயிருந்தேன்..நைட் தங்குவதற்கு மருதமலை போனேன்.தூங்கி எழுந்து முருகனை தரிசிச்சேன்.அப்போ ரொம்ப மன வேதனைல இருந்தேன்.."அடேய் முருகா என்ன எதுக்காக படைச்ச.நான் என்ன தப்பு பன்னேன்..ரேணுவ ஏன் எனக்கு காண்பிச்ச.எதுக்கு எங்களுக்குள்ள காதல் வரவச்ச..?எதுக்குடா எங்களப் பிரிச்ச..? நான் யாருக்கு என்ன துரோகம் நினைச்சேன்..நான் என்ன சாதிக்கிறதுக்காக பிறந்தேன்.என்ன வாழவைக்காத நீ கடவுளா.? எனக்கு பதில் தெரிஞ்சாகனும்.இல்லாட்டி நீ கல்லு.நான் ஏதாவது சாதிக்கனும்னு பிறந்திருந்தா மட்டும் என்னை உயிரோட வை.இல்லனா இப்பவே கூப்பிட்டுக்கோ"னு அழுது கடவுள்கிட்ட சண்டை போட்டுட்டு.கோவை வந்துட்டேன்.மீட்டிங் நடந்தது.மீட்டிங்கில் சமுதாய மேம்பாடு தொழில் மேம்பாடு குறித்து பேசினேன்...மீட்டிங் முடிந்தது..சிறப்பு அழைப்பாளரான ஆனந்த் என்னை அவரோடு பைக்கில் வருமாறு அழைத்தார்.பேருந்துநிலைத்தில் இறக்கிவிடுவதாக கூறினார்..அவ்வளவு பெரிய சிறப்பு அழைப்பாளர் என்னை அழைத்தது ஆச்சரியம்..மறுக்காமல் அவர் பைக்கில் ஏறிக்கொண்டேன்..பைக் ஒரு ரெஸ்டாரண்ட்டை அடைந்தது..அவர் எனக்கு உணவு வாங்கிக்கொடுத்தார்.சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அவர் விசாரித்தார்"உங்களுக்கு என்ன பிரச்சனை."
ரகு:பிரச்சினையா.?அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே என்று சிரித்தான்.
ஆனந்த்:சரி இன்றிரவு என்னோட வீட்டுக்கு வாங்க.இரவுநேரப் பயணம் வேண்டாம்..என் வீட்டில் யாரும் இல்லை.தயங்காமல் வரலாம் என்றார்.
நானும் மறுப்பு தெரிவிக்காமல் சென்றேன்..அபார்ட்மென்ட் வீடு..குடும்பத்திற்கு தேவையான அனைத்தும் அவர் வீட்டில் இருந்தன..என்னை உட்காரச்சொல்லிவிட்டு ஒரு புத்தகத்தை கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார்..நான் புத்தகத்தை திறந்ததும் அதிர்ந்துபோனேன்..அந்த புத்தகத்தினுள் நான் கண்ட அந்த நபர் காவி தரித்து வடநாட்டுக் கூட்டங்களில் கலந்துகொண்ட புகைப்படம்..ரிஷிகேஷில் தியானம் செய்வதுபோன்ற புகைப்படம்..புதிய அதிர்ச்சி எனக்கு.அதற்குள் அந்த நபர் என்முன் வந்து அமர்ந்தார்..பேசத்துவங்கினார்.."உங்களுக்கு என்ன பதில் வேணுமோ என்கிட்ட கேளுங்க நான் சொல்றேன் முருகன் எல்லாம் எனக்கு சொல்லிட்டான்"என்றார் ஆனந்த்..நான் மனதுக்குள் நினைத்ததை இவர் எப்படி வெளிப்படையாகப் பேசுகிறார் என்று ஒரே ஆச்சரியம்...நான் சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன்.
ரகு:என் காதலி என்னை விட்டு ஏன் பிரிய வேண்டும்.?நான் இந்த வேதனையை ஏன் அனுபவிக்க வேண்டும்.?
ஆனந்த்:ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்..உன் அம்மா நீ பிறப்பதற்கு முன்னதாக செய்த துரோக காரியம்.அதனால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வேதனை அலைகள்..உன் காதலியைப் பறித்துக்கொண்டது..நீ படும் வேதனையை உன் அம்மா கண்டு வெதும்பவேண்டுமென்பதும் கர்மா..உன் காதலைக் கெடுத்ததும் உன் அம்மாவேதான்..போதுமா என்றார்..
ரகு:நான் என்ன சாதிப்பதற்காகப் பிறந்தேன்..?
ஆனந்த்:உன் பதினான்கு வயதில் நீ என்னவாக திகழ்ந்தாய்.?
ரகு:கவிஞனாக
ஆனந்த்:ஆம்.கவிஞனாகத் திகழ்வாய்...ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களைச் செய்வாய்..
ரகு:என் திருமண வாழ்க்கை.?
ஆனந்த்:இப்போதைக்கு அதைப்பற்றி சிந்திக்காதே..அது நடக்கவேண்டிய சமயத்தில் நடந்தே தீரும்...நீ உன்னுடைய மேற்படிப்பைத் தொடரு...ஒருவேளை 2022 வரை உனக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் ஆட்சி அதிகாரத்தில் நீ இடம்பெறுவாய்...திருமணம் நடந்தால் கர்மவினையில் உழன்று மிதிபடுவாய்..கடவுள் உனக்கு நல்லதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்...உனக்கான இலட்சியத்தை நீயே உணர்ந்துகொள்வாய்.காலத்திற்கேற்ப உனக்கான பாதை தானாக வழிவிடும்..ஞானிகள் விளக்கமாக எதையும் சொல்ல மாட்டார்கள்.குறிப்பாகத்தான் சொல்வார்கள்..புரிந்துகொள்..யாரோ இல்லாமல் போவதால் ஒரு நிறுவனம் உன் கைக்கு வரும்.அது உன் புகழை உலகிற்கு உணர்த்தும்...
ரகு:நன்றிகள் சாமி..நான் சாதிப்பேன் என்று விதி எழுதப்பட்டிருப்பதை நான் கண்டு மகிழ்கிறேன்...கடவுள் கல் இல்லை.முருகன் என்னைக்கைவிடவில்லை..ஆனால் ஒரே ஒரு வேதனை.என் காதலியின் நிலை என்ன.?நான் அவளுக்கு செய்த துரோகத்தினால் வரும் கர்மவினைக்கு பரிகாரம் என்ன.?நான் அவளை மீண்டும் அவள் கணவரோடு சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா..?
ஆனந்த்:ஹஹஹஹ..அவளே உன்னைத்தேடிவந்து பேசுவாள்..அதற்கான நேரம் வந்துவிட்டது..உன்னைவிட அவளுக்கு உன்மேல் அக்கறை அதிகம்..நீ முடிந்துபோன நிகழ்வுகளை நினைத்து வேதனைப்படுவதை நிறுத்து.."என்றார்...
ஸ்வேதா:அடடா..இவ்ளோ நடந்துச்சா.?அதுக்கப்புறம்..
ரகு:அதுக்கப்புறம் நானும் அவரும் தூங்கினோம்.காலைல பஸ் ஏத்திவிட்டார்.ஊருக்கு வந்து சேர்ந்தேன்.சரி நான் இந்தியப் பொறியியல் பணிகள் IES தேர்வு எழுதனும்னு முடிவுபன்னேன்..அதனாலத்தான் என்ஜினியரிங் சேர்ந்தேன்..கண்டிப்பா 2022 க்குள்ள தேர்வு எழுதி பாஸ் ஆவேன்..இதுதான் என்னோட இலட்சியம்..போதுமா..
ஸ்வேதா:க்ரேட் சார்...கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு..அப்போ நீங்க காதல் தோல்வியால கல்யாணம் வேணாம்னு சொல்லல..IES பன்றதுக்காக வேணாம்னு சொல்றீங்க...கண்டிப்பா என் சப்போர்ட் உண்டு சார்..நீங்க சாதிப்பீங்க கண்டிப்பா...என்றாள் ஸ்வேதா..

எழுதியவர் : தீபி (11-Aug-19, 7:58 pm)
பார்வை : 70

மேலே