அவள் ஒரு கேள்விக்குறி - 1

இந்த படைப்பு அல்லது கருத்துக்கள், பெயர்கள் எல்லாம் கற்பனையேஇந்தக் கதையின் கற்பனை நாயகி அர்ச்சனா

கற்பனை நாயகன் கார்த்திக்

முழு நேர கற்பனை வில்லி ஸ்ருதிஅர்ச்சனா...

அழகின் உச்சக்கட்டம்

பேரழகி என்பதில் எந்த பொய்யுமில்லை

ஸ்ருதியே இல்லாத கச்சேரியில் நுழைந்தவள் போல்

அறவே அலுவலகத்தில் நுழைந்தாலே..

அழகும் அவள் தான்

திமிரும் அவள் தான்

அகங்காரம் பிடித்தவளும் அவள் தான்

எல்லாம் நாம் தான் என நினைப்பாள்

அல்லி விழி கர்க்கண்டு பேச்சு

முல்லை மொழி

கிளியின் கீச்சுச் சத்தம்

சங்கீதத்தின் ஸ்ருதியவள்

பேனாவின் எழுத்தவள்

அழகையும் மிஞ்சியவள்
மொழியையும் கெஞ்சியவள்
அவள்
அழகோ அழகு
திமிரோதிமிர்

காலையில் அவள் வரும் நேரத்தில்

அவளைக் காண ஆயிரம் கண்கள் காத்திருக்கும்

அவள் வந்துவிட்டால் ஆயிரம் இமைகள் இமைக்காமல் நின்றிருக்கும்

ஆயிரம் கிளிகள் சுற்றி வந்தாலும் அவளுக்கு கிளிகளை விட

அவளுக்கு காக்காயை தான் பிடிக்கும்

வழுக்கு மண்டைகள் அவள் கால்களை அவள் கழுவ எப்பொழுதும் காத்திருப்பார்கள்கதைக்களம்

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது

திடீரென்று ஒரு நாள் கார்த்திக்கை தன் வாய்க்கு வந்தபடியெலாம் திட்டிதீர்த்துவிட்டாள்

எல்லாம் அவளுக்கு நன்றாக போகும் வேளையில்

தானாகவே தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டாள்

தன்னை மிஞ்சி என்ன ஆகப்போகிறது எனக் கர்வம்கொண்டிருப்பாள் போல

தன் தோழி ஸ்ருதி எல்லாம் பார்த்துக் கொள்வாள் என நினைத்திருக்கலாம்

பல வருடங்களாக அதே அலுவலகத்தில் பணிபுரியும் கார்த்திக்கோ அமைதியாய்

அன்பாய் இருந்தது அவளுக்கு இளக்காரமாக போய்விட்டது போல

பேய்யும் பிடாரியும் கலந்து ஒரு கலவையாகவே மாறியும் விட்டாள் அந்த அழகி

பேரழகி என்ற நினைப்பு எப்பொழுதும்

அவளைச் சொல்லி குற்றமில்லை

அவள் ஒற்றை சொல்லுக்காக அவள் காலைக் கழுவ கூட காத்திருக்கும்

சில ஆண் கூட்டத்தை தான் சொல்ல வேண்டும் .சரி

நடந்தது நடந்தாகிவிட்டது.

இந்தக் கதையை பல கோணத்தில் பார்ப்போம்

ஒன்று - இப்பொழுது கார்த்திக் அப்படியே விட்டுவிட்டால் என்ன ஆகும்

இரண்டு - கார்த்திக் ஸ்ருதியிடம் போய் முறையிட்டால் என்ன நடந்திருக்கும்

மூன்று - கார்த்திக் இதை புகாராக தொடுத்தால் என்னவாகும்

என மூன்று கோணங்களில் இந்தக் கதையை பார்ப்போம்.

எழுதியவர் : (12-Aug-19, 12:55 pm)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 112

மேலே