நிலவு மங்கை

அமாவாசை இரவு மேகம் முட்டிய வானம்
காரிருள் கவ்வி இருக்க , இருளைக் கிழித்து
ஒளி ஒன்று என்னை நோக்கி வந்தது
தொலைவிலிருந்து பார்க்க சிறு நிலவாய்
மண்ணில் உலாவிவரும் நிலவாய்
அருகில் வந்தபோது தெரிந்தது அது
ஒளி வீசும் அழகு காரிகையின் உருவம் என்று
புரிந்தது இப்போது அந்த வான் நிலவுதான்
சிறு உருவத்தில் மண்ணில் நிலவுப் பெண்ணாய்
உலவ ஆசைப்பட்டு தன் ஓய்வு நாளில் விண்ணிலிருந்து
இப்படி இவ்வழகிய ஒளிர்முக நங்கையாய்
வந்தாளோ என்று நிலவு மங்கையாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Aug-19, 3:10 pm)
Tanglish : nilavu mangai
பார்வை : 226

மேலே