நறுந்தொகை 28 - 29

28. அடினும்பால் பெய்துகைப் பறாதுபேய்ச் சுரைக்காய்.
29. ஊட்டினும் பல்விரை யுள்ளிகம ழாதே.

- அதிவீரராம பாண்டியர்

பொழிப்புரை: பேய்ச் சுரைக்காயைப் பால்விட்டுச் சமைத்தாலும் அதன் கசப்பு நீங்காது.

உள்ளிப் பூண்டுக்குப் பல வாசனைகளை ஊட்டினாலும் அது நறுமணம் கமழாது (தீநாற்றமே வீசும்).

கருத்து:

இவ்விரண்டு வாக்கியமும், சிறியோர்க்கு எவ்வளவு நன்மை செய்தாலும் அவர்கள் தம் சிறுமைக் குணத்தைக் கைவிடார் என்னும் கருத்தை அடக்கிக் கொண்டிருக்கின்றன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Aug-19, 8:08 pm)
பார்வை : 114

மேலே