சலீம்

ரொம்ப நாள் “சாட்டிங்” பண்ணலாம்-னு நெனச்சு அன்னிக்கு ஏதோ ஒரு வெப்சைட் போனேன்... நிறைய பேர் பேசுவதற்காக ரிகுவஸ்ட் கொடுத்தாலும் எனக்கு ஒரு பேர் தான் பிடித்து இருந்தது.. ஆம், அது சலீம். எனக்கு ரொம்ப பிடித்த விஜய் ஆண்டனி நடிச்ச படமாச்சே, அந்த பேரு வெச்சு இருகாங்களேனு கிளிக் பண்ணி பார்த்தேன். சலீம் எனக்கு ஹலோ போட்டு இருந்தான்..
நானும் சுகிதா என்ற பெயரில் ஹாய் உங்க ASL என்ன ? னு போட்டேன்.
சலீம் உடனே 28, ஆண், இந்தியா, நீங்க ?? னு ரிப்லை பண்ணான்…
எனக்கு 34 வயது, ஹூம்… சின்ன வயதா இருக்கே, பேசுவானானு நினைத்துகொண்டே என் தகவல்களை உடனே டைப் செய்து எண்டர் விசையைத் தட்டினேன்... மெசேஜ் போகலே, தட்டி தட்டி பார்க்கிறேன்.. போகவில்லை…

அட என்னடா இது சோதனை என்று பார்த்தால் இணையம் துண்டிக்கப்பட்டு இருக்கு..
சரி கணினியை மீண்டும் ஸ்தார்ட் பண்ணி பார்த்தேன். லோவ் நெட் னு காட்டிடுச்சு.. மணியைப் பார்த்தேன், நள்ளிரவு ஆயிடுச்சு, அதனால் எல்லாத்தையும் அடைச்சு போட்டுட்டு நான் தூங்கபோயிட்டேன்.

மறுநாள், பகல் நேரம், சந்தோஷமா வேலை விடுப்பை ஓய்வு எடுத்து கழித்து கொண்டிருக்கும்போது சில பழைய நண்பர்களுக்கு மெசேஜ் போட்டேன். அங்கிருந்து பதில் ஏதும் வரவில்லை. ஆகையால், மீண்டும் சாட்டிங் பகுதிக்கு போனேன். நிறைய பேர் என்னுடன் பேச மெசேஜ் அனுப்பி இருந்தாங்க, ஒன்னு ஒன்னா படிச்சு படிச்சு பார்த்துட்டே இருக்கும்போது சலீம் மெசேஜ் வந்து இருந்தது… ஆவலுடன் திறந்து பார்த்தேன்..
ஓ, இந்தியா னு சொன்னதும் ஓடி போயிட்டீங்களா-னு மெசேஜ் இருந்தது.

அடடா, என்னைத் தப்பா நெனச்சிகிட்டானேனு, நான் நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி மெசேஜ் ரிப்லை பண்ணேன்… அவன் ஓன்லைன் ல இல்ல, அதனால் ஓன்லைன் வந்தோனே ரிப்லை பண்ணுவானு அடைத்து வெச்சிட்டேன்… அதுக்கு மேலே யார்கூடவும் பேச எனக்குப் பிடிக்கல… யூடியுப் –ல சில காணொலிகளைப் பார்த்துட்டு நேரத்தைப் போக்கினேன். இரவும் ஆச்சு… யாருனாவது பேசனும் போல இருந்தது. மீண்டும் சாட்டிங் போனேன், சலீம் ஓன்லைன்-ல இருந்தான்… ஒரே குஷியுடன் ஹாய் போட்டேன்… ஹாய் னு ரிப்லையும் அவனிடமிருந்து வந்தது…

எழுதியவர் : MALATHI DESIK MONY (13-Aug-19, 1:25 am)
சேர்த்தது : dkmalathi
பார்வை : 149

மேலே