சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் இல்லை – நல்வழி 15

அனு எதுகை அமைந்த நேரிசை வெண்பா

சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்(கு)
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்
விதியே மதியாய் விடும். 15 நல்வழி

பொருtளுரை:

சிவாயநம என்று மனதில் தியானித்துக் கொண்டிருப்பவருக்கு ஒருபொழுதும் துன்பம் உண்டாகாது; இஃதொன்றுதான், விதியை வெல்லுதற் கேற்ற உபாயமும், அறிவுடைமையும் ஆகும்; இதுவல்லாத எல்லா அறிவுகளும் விதியின்படியே ஆகிவிடும்.

விளக்கம்:

சிவாய நம என்று கூறும் ஐந்தெழுத்து மந்திரமே விதியை வெல்லும் உபாயமாகும்.

அவர்களுக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை.

இதைத் தவிர நாம் மதி / அறிவு என்று நினைக்கும் அனைத்து விஷயங்களும் விதியின் வழியில் தான் செல்லும்

சிவபெருமானுக்குரிய திருவைந்தெழுத்தை இடையறாது நினைந்துகொண்டிருப்போர்க்கு விதியால் வரும் துன்பமில்லை; ஏனையர்க்கு உண்டு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Aug-19, 10:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

மேலே