பூக்காரி

பூச்சுமந்த கூடைசந் தையினில் காலியானால்
பூக்காரி பர்ஸ்நிரம் பும் .

பூவும்பூக் காரிமுக மும்வாடும் சந்தையில்
பூவிலை போகா விடின்

பூத்து நிரம்பி பொலிவுடன் காத்திருக்கும்
தோட்டம்பூக் காரி வர .

கூடையில் பூச்சுமப்பாள் கூந்தலில் சூடாள்
மலரவள் வாழ்வாதா ரம்

பூமணக்கும் கூடையில் ஆடும் கணவனின்
வாய்மணக்கும் துர்மது வில்

அழும்பிள்ளைக் கும்ஆடி டும்அப் புருஷனுக்கும்
ஆதாரம் இப்பூச் சரம் !

மலர்க்கரம் பூவால் தொடுக்கும் மலர்ச்சரம்
மாற்றுமிவள் வாழ்வைப்பூ வாய் .

எழுதியவர் : கவின் சாரலன் (13-Aug-19, 10:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே