கால மாற்றம்

கால மாற்றம்.

ஒரு காலத்தில்
குடும்பம் என்பது அன்பால் கட்டப்பட்ட தேன் கூடு.
இன்று துரோகங்களால் கட்டமைக்கப்பட்ட கான்கிரீட் கூடாரம்.
அன்று இல்லங்களில்
அம்மா அன்பின் ஆதாரசுருதி
அப்பா ஆனிவேராய்,
அஸ்திவாரமாய்,
பிள்ளைகள் தாங்கி பிடிக்கும் தூண்களாய்
ஆனால் இன்று குடும்பம் என்பது
சொல் அளவில்
உறவுகள் என்பது உதட்டளவில்
கூட்டு குடும்பம் மடிந்து
பல வருடங்கள் ஓடிவிட்டன.
தனிக்குடித்தனமும் தளர்ச்சி அடைந்து தவிக்கிறது.
வீடு உண்மை மிக பெரிதாக இருக்கிறது உறவுகள் தனித்தனி தீவுகளாக வாழ்கிறது.
விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்று மிக உறக்க கூறினாலும்
போலி நாகரீகத்தின் அதீத மோகம்,
அளவுக்கு அதிகமான
நுகர்வு கலாச்சாரம்
பெறுகியதால்
அதிக பணம் ஈட்டுவதால்
ஏற்பட்ட ஆனவம்,
நான் என்ற கர்வம்,
காலகாலமாக பின்பற்றி வந்த அந்த அற்புதம் உறவுகளில் இருந்த
பந்தம், பாசத்தை
சின்னாபின்னமாக்கி
மானுடத்தை தனி மனிதனாக்கி
மிக பெரிய மனநோயாளி ஆக்கிவிட்டது.

'நான்' என்று எதுவும் இல்லை.
'நாம்' என்று ஒன்று உண்டு.
அதில் 'நான்' என்ற ஒன்று அடங்கும்.
விட்டு கொடுத்தல்,
தியாகம் செய்தல்,
நம் பண்பாட்டின் பழக்கம்.
அன்று அம்மா
அனைத்தும் தியாகம் செய்தாள்.
அப்பா தன் பிள்ளைகளுக்காகவே வாழ்க்கையை அர்பணித்தார்
பிள்ளைகள் தடம் மாறாமல்
தன் தாய் தந்தையை
பேனி காத்தார்கள்.

இன்று
பெற்றோர்களை குறையேதும் கூற முடியாது.
காலத்தின் போக்கு
அவர்கள் அவர்களுடைய பிள்ளைகளை வளர்க்கவில்லை
உருவாக்குகிறார்கள். பிள்ளையை
பந்தய குதிரைகளாக
வளர்க்கிறார்கள்.
அவன் ஒரு இயந்திரம் போல் ஆகிவிட
அவனிடம் நீங்கள் எவ்வாறு
அன்பை எதிர்பார்க்க முடியும்.

மனம் அமைதி கானுங்கள்.
அன்பை தினம் வளர்தெடுங்கள்.
வருங்காலம் நிச்சயம்
போராட்டமாக இருக்காது.
வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும்.

- பாலு.

எழுதியவர் : பாலு (13-Aug-19, 4:34 pm)
Tanglish : kaala maatram
பார்வை : 165

மேலே