தியாகி

🙏🏽தியாகி

ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறுகண்ணத்தை காண்பி - ஏசு.

அடித்தால்
திருப்பி
அடிக்காதே - காந்தி.

அரை வயிறு கஞ்சி
மங்கிய பார்வை
ஒட்டிய வயிறு
திடமான மனது
மாறா அஹிம்சை எண்ணம்.....

நாம் சுதந்திரமாக சுவாசிக்க
அவர் சுவாசத்தை நிறுத்தினர்!

மெழுகாய் உருகி
அனையா தீபமாய்
ஓய்வில்லா அலையாய்
ஓய்வில்லாமல் உழைத்தனர்.
உண்ணாமல் உறங்காமல் பெற்றெடுத்தனர் சுதந்திரம் எனும் குழந்தையை......

அறம் வழியில் வந்தவனுக்கு தியாகி என்ற பட்டம் - நன்றி!
மிக்க நன்றி!!
குறுக்கு வழியில் வந்தவனுக்கு தலைவன் என்ற பட்டம். இது எந்த விதத்தில் நியாயம்!
அநியாயம்!! அநியாயம்!!

நிழல் பட நாயகர்களுக்கு பால் அபிஷேகம் .
நிஜ உலக நாயகர்களுக்கு சாணி அபிஷேகம் .
வெட்கம்!! வெட்கம்!!

அரசாங்கம் தரும்
அர்ப்ப பணம்
அது மிகவும் சொர்ப்ப பணம்
அதை வைத்து அமைதியாய் வாழ்கிறார் என் தியாகி.
என்றாவது ஒரு நாள் திருந்தாதா இந்த மக்கள் கூட்டம் .
இதுவே அவரின் எண்ண ஓட்டம்.

நல்லவனுக்கு என்றுமே சமூகம் தரும் செருப்படி.
அதுவே அவன் அற்றிய அறும் பணிக்கு உருப்படி.
என்ன செய்வது , இதுவே என் பாரதம்!

- பாலு.

எழுதியவர் : பாலு (13-Aug-19, 4:55 pm)
சேர்த்தது : balu
Tanglish : thiyaagi
பார்வை : 63

மேலே