நாம் நமது கலாச்சாரம்

இதிகாசங்கள் புராணங்கள் இவற்றை நாம்
ஆழ்ந்து படித்தல் வேண்டும் இவற்றில்
எத்தனையோ எத்தனையோ நம் வாழ்வில்
நாம் கடைபிடிக்க வேண்டிய போதனைகள்
பொதிந்து கிடக்கின்றன கதை மூலம்
காவிய கவிதைகள் மூலம் இவை எல்லாம்
ஒவ்வோர் காலகட்டங்களில் நடந்தவையே
இவற்றை ஏனோதானோ என்று மேலாகபடித்தோ
படிக்காமலோ இவற்றைப் பற்றி அவதூறு
செய்தல் பெருங்குற்றம் அதற்கு தண்டனை
'அவன்தான்' தரணும் தருவான் ஒரு நாள்
இவற்றைப் படித்து பெரும்பயன் பெறலாம்
வாழ்க்கை ஏற்றம் பெறவே -நம் குழந்தைகளுக்கு
நல்லதைக் காட்டி வளர்ப்போம் நல்லவை சொல்லி
நம் நாட்டு கதைகளே நம் நாட்டவருக்கு
நன்மை தருபவை எப்படி நம் மண்ணிற்கேற்ற
உணவு நமக்கு உகந்ததோ அதுபோல
நமது பூமி, நமது மொழி நமது கலாச்சாரம்
நமக்கென்றும் ஏற்றம் தரும் சாதனங்கள்
அறிவோம் காப்போம் போற்றி வாழ்வோம் இன்பமாய் என்றுமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (13-Aug-19, 5:30 pm)
பார்வை : 92

மேலே