நண்பன்

உனக்கு நண்பன் என்று யாரேனும் உண்டா
என்று அவர் கேட்க , 'உன் பெயரை சொன்னேன்
அங்கிருந்த உன்னைக் காட்டி' அக்கணமே
என்மீது அவர்க்கு மதிப்பு பன்மடங்கு கூட
என் ஏழ்மை இப்போது அவர் கண்களுக்கு
தெரியாமல் போனது என்னையும் தன்னைப்போல்
ஓர் மனிதனாய்ப் பார்க்க துவங்கினார் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (13-Aug-19, 9:03 pm)
Tanglish : nanban
பார்வை : 340

மேலே