என் சடலத்தை எரியுங்கள்

மருத்துவமனை வாயிலில் கட்டுக்கடங்கா பிரியங்கள்....
சவமானப்பின்பும் அவள் கட்டுடலைக் காணவிழைந்து.....

ஆடை ஆபரணம் அரிதாரப் பூச்சுடன்
அலங்காரமாய் அவதானித்த அழகு உடல்...
அரற்றல் அலறல்கள் ஒப்பாரிகள் ஓய்ந்தப்பின்
அடுத்தநாள் நடந்தேறவுள்ள உடற்கூறுக்காய்
உறையும் குளிரில் உணர்வற்று விறைத்து
அம்மணமாய் கிடந்தது வெண் போர்வைக்குள்......

காமத்தின் உச்சத்தில் இழிதகவு உயிராய்
சாமத்தில் சவத்துடன் பாடையில் கூடிட
வக்கிர உக்கிரத்தில் ஊர்ந்து நுழைந்தது
மனிதம் துறந்த பிணவறைக் காவல்

வலுகொண்டு வலித்தது வலியற்ற சடலத்தை
விரல்கட்டை அவிழ்த்தது வாட்டமாய் நகர்த்தி.....
தானாய் பிரிந்தது தடையற்றுத் தொடைகள்
ஈனமாய் புணர்ந்தது கட்டாந்தரையில் கிடத்தி.....

அடுகள அழல்வாழ்வில்
அவள் படுக்கை ஓய்ந்ததில்லை
அடங்கி அமரம் ஆனப்பின்பும்
அவள் யோனி தப்பவில்லை....!

கவிதாயினி அமுதா பொற்கொடி

“Burn my Body” என்றக் குறும்படம் தாக்கத்தில் எழுதியது.......

எழுதியவர் : வை.அமுதா (13-Aug-19, 9:16 pm)
பார்வை : 86

மேலே