அத்தானின் ஆசை

புல்லாக்குப் போட்டு வந்த புதிய மயிலே மயிலே
மகிழ்ச்சியில் காதல் கொண்டேன் குயிலே குயிலே
நெஞ்சோடு அணைத்துக் கொள்ளு நிழலே நிழலே
நேற்று முதல் தூங்கவில்லை உன்னால் அழகே

சிணுங்கும் கொலுசுப் போட்ட சிவந்த பழமே
சிக்கென்று ஒட்டிக் கொள்ளத் துடிக்குது மனமே
அத்தானின் ஆசையைக் கேளு அழகு சிலையே
பெரும் யுத்தமே நடக்குதடி என் மனதுக்குள்ளே

பனியாக உருகுறேண்டி பகலின் நிலவே
பருத்தியாய் வெடிக்கிறேண்டி உனை பார்க்கும் போதே
பச்சை பட்டுடுத்திய பவழக் கொடியே
பரவசம் ஆனேணடி பழகியே அழகே

மயக்கும் அழகு கொண்ட மஞ்சள் வெயிலே
மறுப்பிறப்பு எடுத்துப் பொழியும் மழையே மழையே
அறிவின் அம்சம் கொண்ட அரியப் பொருளே
ஆயுளுக்கும் நீதாண்டி என் அகத்தின் ஒளியே.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (14-Aug-19, 9:16 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 114

மேலே