அவள் ஒரு கேள்விக்குறி - 2

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் வந்தாள் அர்ச்சனா ...அழகு தாரா
மாடர்ன் உடையில் நயன்தாரா
குடைக்குள் மழையிவள்
நிலவும் தாராவும்
ஒன்று தான் ..
நிலவு ஒளிர்ந்திருக்கும்
இவள்
அழகில் மிளிர்ந்திருப்பாள்
நிலவுக்கு மாதத்தில் ஒரு நாள் தான்
பௌர்ணமி
இவள் முகம் என்றுமே
பௌர்ணமிகொடி இடைக்கும்
பொடி நடைக்கும்
அவள் ஒரு முன்னுதாரணம்
அழகும் தமிழும்
அமுதும் தேனுமாய் கலந்தவள் ..
வைத்த கண்ணை எடுக்காமல்
பார்ப்பதோ ஆண்களுக்கு எப்பொழுதாவது ஏற்படும் தருணமிது
தாராவின் வடிவில் அது தினம் தினம் உண்டு
நொடிக்கு நொடி
அவளைக் காணாத பொழுதில்லையே
இமைக்காமல் பார்க்க வெக்கமாக இல்லையோ
கேட்க நண்பனும் இமைமறந்து பார்த்தால்
அவள் தேவதை இல்லாமல் வேறு யார்?எதிரே வந்தாள்
என்ன செய்வதென்றே தெரியவில்லை
சில நொடி இதயமே நின்றுவிட்டது
அவள் பேசும் பேச்சும் காதில் விழவில்லை
அழகோடு பிறந்தவள்
தமிழோடு நனைந்தவள்
இமை இமைப்பதை பார்க்கவே கோடி கண்கள் வேண்டும்
மை தீட்டிய விழிகள்
பொய் கூறா உதடுகள்
பேச பேச
கோடி ஆசை வரும்
இன்னும் பேச வேண்டுமென
சொர்கத்தின் வாசலில் நின்றுகொண்டு இறங்க மனம் வருமோ?
அவள் விழியன் படபடப்பை மீறி
வேறு எதையும் காணவும் முடியாது
பேசவும் முடியாது
பதிலும் உடனே சொல்வாள் ..
கேள்விக்கு கணைகளுக்கு பதில் சொல்ல நேரமே போதாது
அவ்வுளவு வேகம்
அழகா இருக்கா
அறிவோடும் இருக்கா
விளையாட்டாவும் இருக்கா
வினையாவும் இருக்கா !தயக்கம் என்ன
சொல்ல தயக்கம் என்ன
பெண் மானே
பொன் சுவடுகள் பதிக்க வா
அழகே வா
அன்பே வா
பண்பே வா
குணவதியே வாஅழகோ அழகு
அவள் ஓர் அழகு
அதிசியத்தின் அழகு
அலாவுதீன் அற்புத குலவிளக்கு
அழகு தமிழ் பேசும் பைங்கிளி
ஆரவாரமின்றி பல வருடமாக ஓர் பேரழகி
அவளுக்கு முகப்பருவும் அழகு சேர்க்கும்
அவள் விரல் கொண்டு குழல் மீட்ட
சங்கீதம் பிறந்தது
மௌனப் புன்னகை அழகிற்கு மெருகூட்டும்
காதோரம் லோலாக்கு அழகை தூக்கி நிறுத்தும்அழகு தேவதையவள்
பார்த்தாள் பார்த்துக்கொண்டே இருக்கலாம்
மௌனமான பேச்சு
மெதுவான நடை
அளவான உடை
புன்முறுவல்
உங்கள் முன் நிற்பது ஓவியம்தான் என சந்தேகமும் வரும்
சேலையின் சோலை
மங்கை எனும் மாலை
அழகு பூஞ்சோலை
மகிழும் மாஞ்சோலை
தைரியமான அணுகுமுறை
மங்கையை தேவதையாக மாற்றும்பறவையில் அன்னமிவள்
நிறத்தில் வெண்மையிவள்
பூக்களில் மல்லிகையிவள்
அழகில் மிகையில்லாதவள்
நெற்றியின் குங்குமவிவள்
பேசும் கிளியிவள்
நாணத்தின் தமக்கையிவள்
நிலவின்மடியில் உறங்குபவள்
புன்னகைக்கு கூடப்பிறந்தவள்
நீலக்கடலின் முந்தானையிவள்
வானவில் புருவமிவள்
பருவத்தின் மோஹினியிவள்
பெண்ணினத்தின் ரதியிவள்அழகே நீ இரவாக
வான் உனது உடையாக
விண்மீன்கள் உனக்கு ஆபரணமாக
வானவில் உன் வலையலாக
மின்னல் உன் சிரிப்பாக
நிலவு உன் முகமாக
அலையும் மேகங்கள் உன் விழியாக
விடியும் இளஞ்சிவப்பு சூரியன் உன் உதடாக
என் மீது நீ பைகிறாய் வெயிலாகஅழகும் சுட்டித்தனமும்
குறும்பும்
நடிப்பில் கொண்ட நஸ்ரியா
அழகில் ஓர் பிரம்மிப்பு
விழியில் ஓர் ஆச்சர்யம்
நடிப்பில் ஓர் சில்மிஷம்
வெற்றிக்கு களிப்பில் துள்ளி விளையாடவில்லை
தன் மொழியில் அடங்கவில்லை
மீண்டும் நடிக்க வருவதில்
ரசிகர்கள் வரவேற்க காத்திருக்கிறார்கள் ராணிதங்கத்தால்
தங்கத்தை
அலங்கரித்தால் !

அழகால்
அழகை
விவரித்தால் !

மொழிகள்
மொத்தமும்
தமிழாக !

அணைகள்
அத்தனையும்
விவசாயிக்காக !

பொறாமையும்
பொற்குளமும்
பெண்ணாக!

மாலையும்
மனமும்
மல்லிகையாக !

மஞ்சளும்
மங்கையரும்
நீயாக !பார்த்த தருணம்
கரைந்ததது மனது
ஓவியன் தீட்டிய விழிகள்
வரையாத புன்னகை
பேணா எழுதாத கவிதை
பார்வைக்கு அர்த்தம் என்னவோ?
கூந்தலது காற்றிலாட
மனதும் சேர்ந்தாட
இமை ஒரு ஆச்சர்யக்குறியாக
பார்ப்பது என்னவோ கேள்விக்குறியாக ?முன்பு முதல் நாள் பார்த்தபொழுது
வெட்கப்பட்டாள்
சில நாளில்
மெல்ல பேசினாள்
மெல்ல மெல்ல கூட்டத்தோடு
பார்க்கும்பொழுதெலாம் அழகாக மெளனமாக சிரிக்கிறாள்
நான் எதிர்பார்க்கவேயில்லை
ஒரு வார்த்தை பேசிய பொழுது
பொது இடத்திலும்
விடாமல் விண்மீன்கள் சிதறுவதுபோல
அழகா தெறிக்கப் பேசினாய்
ஊரெல்லாம் பொறாமையில் வாடியிருக்குமே
எத்தனை ஆன் நெஞ்சங்கள் நொறுங்கியது
இன்றோ நேராக கனோடு கண் பார்த்து பார்த்து பேசுகின்றாயே
நாணம் வெட்கதுடன் நான்
பல வருட நண்பனைப் போல் பழகுகிறாய் நீ
என்னை ஒரு நண்பனாக
ஒரு பாதுகாவலனாக
உன் விழியும் மனதும் ஏற்றுக்கொள்வனெனில்
நான் என் காதலை நட்பாகத்தான் மாற்றவேண்டுமோ ?
இல்லை நீயே மாறும்வரை காத்திருக்கவா?
இன்னும் கொஞ்ச நாளில்
அடித்தும் பேசிவிடுவாய்
அருகிலும் கூச்சமின்றி அமர்ந்தாள்
நீ தோழியே தான்
என்றும் என்னால் உன் நட்பு களங்கப்படாது தோழியே ...பெண்மையின் அழகு
கூர்மை விழியிலா ?
கோதிய முடியிலா ?
நுனிநாக்குத் தமிழிலா ?
அழகு உடுப்பிலா ?
மெல்லிய நகக்கீறலா?
விரலின் மோதிரமா ?
காதோர லோலாக்கா?
பார்வை ஒன்றே போதுமேஇன்று காணவில்லை
இன்னும் காணவில்லை
கண்கள் தேடுதடி
நேரம் நரகமானதடி
நண்பனிடம் கோபம் வருகுதடி
அல்லி விழிக்காரி
பிள்ளை மொழிக்காரி
மழலை பேச்சுக்காரி
அந்த கிளி கீச்சலை கேட்க மனம் ஏங்குதடி
குயில் பாடலை கேட்க வேண்டுமே என இதயம் குமுறுதடி
எட்டு மணி நேரம் எமனாய் மாறுதடி
அலை அலையாய் சோகம்
மனமெங்கும் கவலை
ஏற்கனவே சனியும் ஞாயிறும் தள்ளவே உள்ளம் உருகுடடி
இதில் காணாமல் போனாயே கானல் நீரேநீ இப்பிடியே பேசிக்கொண்டிருந்தாள்
நான் என்ன நினைப்பது
மழமழவென்று கொட்டித்தீர்க்கிறாயே
பேசும் பேச்சுக்கெலாம் எதிர்பேச்சு பேசுகிறாயே புள்ளிமானே
சுளீர் புன்னகை
உன் சிரிப்புக்கு என்ன அர்த்தம் ?
நீ என்னைக் கடந்தபொழுது
மேகம் நிலவைக் கடந்தது போல உணரும்போது
ஒருவன் ஒருத்தியிடம்
காதலியாக இருக்க கூடும் ..
அவங்க ரொம்ப அழகா இருக்காங்களா .. என்றான்
அவளும் ஆமாம் என்றாள்
பேரழகுக்கு போட்டியாளவோ நீ
பல பேர் பார்க்கும் கூட்டத்தில்
பேசிப்பேசி என்னை நான வைக்கிறாயே அழகுகள்ளியேபார்க்கும் பார்வை
எவ்வுளவு தூரம்

மௌனக் கோர்வை
அவ்வுளவு நேரம்

வளையல் காத்திருப்பு
வரும் ஓசைக்காக

கூந்தல் பூத்திருப்பு
சூடப்போகும் மல்லிக்காக

இரு இமைகள் மலையாக
நடுவே கதிரவரன் உதிப்பதுபோல் குங்குமம்

காத்திருப்பதோர் அழகு
தேடிவருபவன் அழகோ அழகுகலங்காத விழியே
முற்றுப்பெறாத கவியே

தளமில்லாத பாடல்
எழுத்திலா தமிழே

பனிபடர்ந்த கொடியே
குளிரிலா மார்கழியே

வெண்மையிலா நிலவே
மிளிரிடும் முகமேஇந்தப் பார்வைக்காகவோ என்னவோ
ஏங்கிய நாட்கள் எத்தனையோ
கண்கள் பூரித்துப் போக
காலத்தின் கோலத்தில் காவியத்தின் நாயகியவள்
அழகெல்லாம் ஒன்றுகூடியவள்
நிலவெல்லாம் அவள் முகம்
கனவெல்லாம் பூரித்துப்போகபார்த்த தருணங்கள்
விழி கோர்த்த தவணைகள்
மொழி ஈர்த்த புன்னகை
கவிபாடவா என தமிழ் கேட்க
காற்று அவள் தோழியாக
வளம் வருவாளே

எழுதியவர் : கவிராஜா (14-Aug-19, 10:28 am)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 275

மேலே