கன்னம் சிவந்து மென் ஓவியம் தீட்டிட

இமைக்கும் இருவிழிகள் செந்தமிழ் பாட
இதழ்ச்செவ்வோ டைக்கரையில் புன்னகைப் பூமலர
கன்னம் சிவந்துமென் ஓவியம் தீட்டிட
என்நினைப் போஉன்நெஞ் சில் .


இன்னிமைப் பொன்விழிகள் செந்தமிழ் பாடிட
இன்னிதழ் ஓடைக் கரையினில் பூமலர
கன்னம் சிவந்துமென் ஓவியம் தீட்டிட
என்நினைப் போஉன்நெஞ் சில் .

இன்னிமைப் பொன்விழிகள் செந்தமிழ் பாடிட
இன்னிதழ் ஓடையில் பூமலர - புன்னகையில்
கன்னம் சிவந்துமென் ஓவியம் தீட்டிட
என்நினைப் போஉன்நெஞ் சில் .

---முறையே பலவிகற்ப இன்னிசை ஒருவிகற்ப இன்னிசை
நேரிசை வெண்பாக்கள்.

எழுதியவர் : கவின் சாரலன் (14-Aug-19, 11:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே