பிக்பாஸ் - கஸ்தூரியால் களைகட்டுமா

ரெண்டு நாளா பிக்பாஸ் எழுதலைங்கவும் ஏன் எழுதலைன்னு குறுஞ்செய்தியாய் சிலரின் கேள்விகள்... அட அப்ப இதையும் சிலர் வாசிக்கத்தான் செய்கிறார்கள். ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு இந்த எழுத்துப் பிடித்தும் இருக்கிறது, காசா பணமா எழுதுவமேன்னு இன்று எழுதியாச்சு.வியாழன் : புலி உறுமுது... புலிஉறுமுதுன்னு காலையில கிளப்பி விட்டானுங்க... எப்பவும் போல் ஒரு ஆட்டத்தப் போட்டுட்டு அன்னைக்கு ஆட்டையை ஆரம்பிச்சானுங்க... அடிச்சிக்க மாட்டேங்கிறானுங்க... அழ மாட்டேங்கிறானுங்க... சுத்தப் போராப் போகுதுய்யா பிக்பாஸ்... எழுதுறதுக்கும் ஒண்ணும் சிக்கலை. என்னத்தை எழுதி என்ன செய்யன்னு யோசிக்கத்தான் வைக்குது. கவின் மீண்டும் லாஸை லவ்வ ஆரம்பிப்பது போல் ஏன் நீ அதைச் செய்தாய்...? அப்படின்னு ஆரம்பிக்கிறான். நீ புரிஞ்சிப்பேன்னு நினைச்சேன்... நீ தத்தியா இருக்கியேன்னு லாஸ்ஸூம் மெல்ல லாவிப் பிடிக்க ஆரம்பிக்க காதல் கொடி மீண்டும் துளிர ஆரம்பிக்கிறது.அந்தப் பக்கமா முகனும் அபியும் லவ்வோ லவ்வு அம்புட்டு லவ்வு... ஆனா அவன் நட்புங்கிறான்... அபியோ அதெல்லாம் இல்லைன்னு அடிச்சிச் சொல்லுது. ஒரு பக்கம் தர்ஷனும் ஷெரினும் காதலா நட்பான்னு யோசிக்கும்படியான பெர்பார்மன்ஸ்.... இதுல பாவம் சாக்சி... அத்துவிட்டதும் இல்லாம அதுமேல எப்படிடா பழி போடலாம்ன்னு கவின் யோசிச்சிக்கிட்டு நிக்கிறான். சேரன், மது எல்லாம் சேர்மானம் கிடைக்காமல் செரிக்காத வயித்துக்காரன் மாதிரி முறுக்கிக்கிட்டுத் திரியிறாங்க.பிக்பாஸ் இந்தப் போட்டியில ஜெயிச்சா உங்களுக்கு கிப்ட்டுன்னு சொல்லி ஒரு பக்கம் எண்ணிக்கையில்லாப் பேப்பர் பந்து இருக்கும்... அதுக்கு நேர் எதிர்ப்பக்கம் ஒரு வாளி இருக்கும். நீங்க எல்லாரும் செங்கல் இறக்குற கொடுக்கிற சித்தாள் மாதிரி எதித்து எதித்து நின்று ஒரு சின்னப் பேடை வச்சித் தட்டி மூணு பந்தைச் சிதறாமல் வாளியில போட்டுட்டா கிப்ட் உங்களுக்குன்னு சொல்லவும், இந்தத் தத்திய இதென்னடா போட்டின்னு கேக்காம, இந்த இடத்துல வனிதா இருந்திருந்தா இதெல்லாம் ஒரு போட்டின்னு த்தூன்னு துப்பிட்டு போட்டிய கான்சல் பண்ணுய்யான்னு சொல்லிட்டுப் போயிருக்கும்... ஆனா இவனுக சின்சியரா, கேக் கிடைக்கும் திங்கலாம்ன்னு கேனத்தனமா யோசிச்சு விளையாண்டானுக.மூணு பந்தை முப்பதே செகண்டுல போட்டுட்டு பிக்பாஸ் எங்க கிப்ட்டுன்னு காத்துக்கிட்டு கிடந்தானுங்க... பிக்பாஸ் வீட்டுக்குள்ள பிரிட்ஜ் உயர கிப்ட் பாக்சை கொண்டாந்து வச்சிட்டாரு. ஆனா அந்தப்பக்கமாப் போன மது அதைப் பார்க்காத மாதிரியே வந்ததுதான் நமக்கு ஆச்சர்யம். அப்புறம் எல்லாரும் பார்த்துப் பிரிச்சா அதுக்குள்ள 'டிவிட்டர்' கஸ்தூரி. காலையில புலி வருது புலி வருதுன்னு சொன்னானுங்க... வந்தது கிளி.கஸ்தூரி வந்ததும் பிக்பாஸ் வீட்டுக்குள்ள பிரச்சினைகளுக்கு பஞ்சம் இருக்காதுன்னு சொன்னானுங்க... நீ இதைச் செய்... நீ அதைச் செய்யின்னு மொக்கை போட்டுக்கிட்டு இருந்துச்சு... மொத்தத்துல கவினுக்கும் லாஸூக்கும் கனெக்சன் கொடுத்து சாக்சிக்கு சாணை வச்சிப் பார்த்துச்சு... வியாழன் மொக்கையோ மொக்கை.வெள்ளி: சரி கஸ்தூரி இன்னைக்காச்சும் டுவிட்டைப் போடும்ன்னு பார்த்தா, காணாதவன் கஞ்சியைக் கண்டது மாதிரி பிக்பாஸ் கஸ்தூரியைத் தலையில தூக்கி வச்சிக்கிட்டு, காலையில ஆடி முடிஞ்சதும் நீ வில்லுப்பாட்டுல வில்லங்கத்தை ஆரம்பின்னு சொன்னாரு. ஆனா அக்கா வில்லுப்பாட்டுப்பாடி கவினுக்கும் லாஸூக்கும் மீண்டும் கனெக்சன் கொடுத்துச்சு. சாக்சிக்கு சூடு வச்சிப் பார்த்துச்சு... அப்பவும் சாக்சி சூடாகாத மாதிரி இருந்திருச்சு.அப்புறமும் என்னமோ பண்ணிக்கிட்டு இருந்தானுங்க... சர்க்கரைப் பொங்கல் வையுங்கடான்னு ஒரு டாஸ்க் கொடுத்தாரு பிக்பாஸ்... நான் சைவம் சூப்பராச் சமைப்பேன்னு சொன்ன கஸ்தூரி கடலைப்பருப்பு போட்டு பொங்க வைக்க, அபிராமி வெல்லத்தைக் கரைக்கிறேன்னு மைக்ரோ ஓவன்ல வைக்கப் போகுது... அப்ப அந்தப் பொங்கல் எப்படியிருக்கும் நான் சொல்லித்தான் தெரியணுமா...? உலகத்துலயே இப்படியான பொங்கல் இங்குதான் வச்சிருப்பானுங்கன்னு தோணுது... நானெல்லாம் சூப்பராப் பொங்கல் வைப்பேன். ஷெரின் அணிக்கு நடுவர் மது 99.9% பொங்கல் வைப்பது எப்படின்னு வகுப்பெடுத்தாச்சு... அதனால அவங்க அதுபோல செஞ்சி வெற்றியும் பெற்றுட்டாங்க... எப்பவும் போல பிக்பாஸ் திங்கிறதுக்கு மைசூர்பாகு அனுப்பிட்டாரு... டீமைக் கலச்சிட்டு எல்லாருமா கல்லாக் கட்டிக்கிட்டாகனுங்க. மது எதிரணிக்குச் சொல்லிக் கொடுத்ததில் சேரனுக்கு உடன்பாடில்லை... தலைவர் என்றால் இரண்டு பக்கமும் ஒரே மாதிரிப் பார்க்கணும் என்றார்... இதுதான் சரி.இந்த வார தலைவர் போட்டிக்கு சான்டி, சேரன், லாஸ் போட்டி போட்டாங்க.... கலரால அதிக இடம் கவர் பண்ணனுமாம்... கவராகியிருந்ததில் சேரனே ஜெயிப்பார் எனத் தோன்றியது. ஆனால் கஸ்தூரியின் கண்களுக்கு சாண்டி தெரிந்தார். அவர் வெற்றி பெற்ற பின் கொஞ்ச நேரம் நகைச்சுவை என்ற பெயரில் நரகலை மிதித்தது போல் ஆட்டம் போட்டார்கள். சேரனின் வருத்தத்தை கஸ்தூரி பிரச்சினைக்கு ஆரம்பப் புள்ளி ஆக்கப் பார்த்தார். விடுங்க பரவாயில்லை... என்ன எல்லாருமாச் சேர்ந்து எதுக்கோ என்னை நாமினேட் பண்ணுவாங்க.. அதிலிருந்து ஒரு வாரம் தப்பலாம்ன்னு பார்த்தேன்... அடுத்த வாரம் குத்தோ குத்துன்னு குத்துவானுங்க... அம்புட்டுத்தான்னு சொல்லிட்டு ஆட்டோகிராப் சேரனா அந்தப்பக்கம் பொயிட்டார்.பட்ஜெட் டாஸ்க்ல 2000 புள்ளி பெற்றும் சாக்சியும் ஷெரினும் ஆங்கிலத்தில் பேசியதால் 250 போக 1750க்கு திங்கிறதுக்கு வாங்கிக்கிட்டானுங்க. அடுத்து பாட்டிலைச் சுற்றிவிட்டு யார் பக்கம் நிற்கிறதோ அவங்ககிட்ட கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லணும்ன்னு மொக்கை போட்டுக்கிட்டு இருந்தானுங்க... சேரன் எல்லாருக்கும் ஒரு வரியில சோசியம் சொன்னாரு. மது எல்லாருக்கும் முத்தம் கொடுத்துச்சு... நமக்குத்தான் என்ன் ஆச்சு பிக்பாஸ் உங்களுக்கு... இப்படி மொக்கை போடுறீங்கன்னு கேட்கத் தோணுச்சு... ஆனா அதுக்குள்ள லைட் அமத்திட்டானுங்க.சரவணன் இல்லாத பிக்பாஸ் வீடு சாவு வீடு மாதிரித்தான் இருக்கு.டுவிட்டர்ல கலக்கிய கஸ்தூரி வீட்டில் அடித்து ஆடுவார்ன்னு பார்த்தா அவரு மரண மொக்கை போட்டுக்கிட்டு இருக்கிறார்.கவின் - லாஸை லவ்வ ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறான்.முகனின் வெளிக்காதலை எப்படியும் உடைத்தே தீருவேன் என அபிராமி அலைந்து கொண்டிருக்கிறார்.என்னத்தைப் பேசினாலும் ஏழரையைக் கூட்டுறானுங்களேன்னு சாக்சி வடிவேலு மாதிரி ஆயிக்கிட்டு இருக்கு.இன்னைக்கு ஆண்டவர் வந்து ஏத்திவிட்டாலும் பிக்பாஸ் 3 அடிச்சி ஆடுமான்னு தெரியலை.பிக்பாஸ் தொடரும்

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (14-Aug-19, 1:18 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 10

மேலே