பிக்பாஸ் - இரண்டாம் ஆட்டம் இனிதே ஆரம்பம்

கஸ்தூரியை அனுப்பியும் எதுவும் நடக்கலை... சாக்சியும் வெளியில போயாச்சு... அப்புறம் யாரை அனுப்புறது..? என பிக்பாஸ் பெரிய யோசனை செய்து ஒரு ஆளை திருப்பி அனுப்பியிருக்கிறார்... அவர் யார்...? வருவார் பின்னே...அதுவரை...காலையில பாட்டைப் போட்டு எழுப்புனானுங்க... எல்லாரும் ராத்திரி வள்ளி திருமணம் நாடகம் பார்த்துட்டு வந்து அதிகாலையில படுத்த மாதிரி அலுப்போட முறுக்குனானுங்க... சாக்சியும் இல்ல தனியா ஆட... கஸ்தூரி ஆடுச்சு... சாண்டியும் சேர்ந்துக்கிட்டார்... ஆட்டங் காட்டுவேன்னு அனுப்புனா நீ ஆடிக் காட்டிக்கிட்டு இருக்கே என பிக்பாஸ் மனசுக்குள்ள அழுதிருப்பார்.நாமினேசன்ல எல்லாரும் அபி, முகன் மேல சொன்னாங்க... சிலர் கவின், லாஸ்லியாவைச் சொன்னாங்க... மதுவையும் சொன்னாங்க... மொத்தம் ஐந்து... கஸ்தூரியைச் சொல்ல முடியாது... என்னமோ தெரியலை அண்ணனும் தம்பியும் சேரனை விட்டுட்டானுங்க... ஒருவேளை தம்பி பொண்டாட்டி எங்கப்பனைச் சொன்னியன்னா சோறு இல்லைன்னு சொல்லியிருக்கலாம்... உடனே கவின் நான் மட்டுமில்ல எங்கண்ணனும் சொல்ல மாட்டான்னு சொல்லியிருப்பான் போல... சத்தியத்தைக் காப்பாத்திட்டானுங்க... சேரன் தப்பிச்சார்.அபிக்கும் முகனுக்கும் முட்டிக்கிட்டு இருக்கு... அவன் நல்லாத்தான் இருக்கேன்னு தலையில குத்திக்கிறான்... இதுக்கு மேல என்னால அழ முடியாதுன்னு அபி தலையில அடிச்சிக்கிது. ஷெரின் என்னடா பிரச்சினையின்னு கேட்டதுக்கு ஒண்ணுமில்லைன்னு அவனும் இதுக்கு மேல என்ன இருக்குன்னு அபியும் சொல்ல, ஷெரின் எதுக்குடா எந்தாலிய அறுக்குறீங்கன்னு பார்த்துச்சு.நாமினேசனப்போ ஷெரின் கவின் பெயரைச் சொல்லி ஒப்பாரி வச்சிச்சி. அபி தன்னோட பேரைச் சொல்லி தனக்குத்தானே ஒப்பாரி வச்சிக்கிச்சு... உம்பேரை நீயே சொல்லக்கூடாதும்மான்னு பிக்பாஸ் சொன்னாரு... அதான் எல்லாரும் என்னைத்தானே சொல்றாங்க... அப்புறம் நான் ஏன் என்னைச் சொல்லிக்கக் கூடாதுன்னு கேட்டுச்சு.... அட மூதேவி உம்பேரத்தானே இருக்க அம்புட்டுப் பேரும் சொல்லிட்டானுங்களே... அப்பவே நீ நாமினேசன்ல வந்துட்டே அப்புறம் ஏன் உன் பெயரைச் சொல்றேன்னு கேக்க, நான் இப்பவே போகணும் வீட்டுக்குன்னு சொன்னுச்சு... முதல்ல அந்த ரெண்டு பேரும் யாருன்னு சொல்லிட்டு இங்கயிருந்து வெளியில போ... இந்த வாரம் நீ போகலைன்னாலும் மக்கள் போகச் சொல்லிட்டாங்கன்னு நாங்களே விரட்டிருவோம்ன்னு சொல்லிட்டார்.சேரனுக்கு தன்னோட பெயர் வரலைன்னு சந்தேக சந்தோஷம்... லாஸ்லியாவுக்கு மீண்டும் தன்னைச் சொல்லிட்டானுங்களேன்னு சந்தேக சந்தோஷம்... மதுவுக்கு முதல் நாள்தானே எனக்கு பதக்கம் எல்லாம் போட்டானுங்க... இப்ப முதுகுல எவன் குத்தியிருப்பான்னு சந்தேக சந்தோஷம்... அபிக்கு அதான் பிக்பாஸே சொல்லிட்டாரேன்னு சந்தேகமே இல்லாத சந்தோஷம்.50வது நாளுக்கு பிரியாணி கொடுத்தானுங்க... மதுவோட சமையல்ல மதி மயங்கிக் கிடந்த எல்லாரும் கட்டுக் கட்டுன்னு கட்டிட்டானுங்க... அம்புட்டுப் பேருக்கும் உண்ட மயக்கம்... சற்றே கண்ணயர்ந்துட்டானுங்க... பிக்பாஸுக்கும் பிரியாணி தின்னா மானை முழுங்கிய மலைப்பாம்பு மாதிரி முறுக்கிக்கிட்டு ஒரு தூக்கம் போடத்தான் சொல்லும் என்பதால் கண்டும் காணாமல் விட்டுட்டார்.பிக்பாஸ் ஹோட்டல் பட்ஜெட் டாஸ்க்... ஒரு பிரபலம் வந்து தங்குவார்ன்னு சொல்லி சேரன் மேனேஜர், மது சமையல்காரர், சாண்டி, கவின் ஆபீஸ் சர்வீஸ் என எல்லாருக்கும் ஒரு வேலை கொடுத்துப் பிரித்து வைக்க, வர இருக்கும் பிரபலத்தை வரவேற்கப் பரபரப்பாக ரெடியாகினார்கள்.வந்தது...'வாடி ராஜாத்தி...' அப்படின்னு பிக்பாஸ் கூட்டியாந்தது...வில்லிக்கெல்லாம் வில்லி...வில்லாதி வில்லி...வனிதாக்கா.வனிதாவைப் பார்த்ததும் புது விருந்தாளியை வரவேற்கக் காத்திருந்தவங்க முகமெல்லாம் காத்துப் போன சைக்கிள் டியூப் மாதிரி 'புஸ்ஸூ'ன்னு ஆயிருச்சு.சேரன் மனசுக்குள் மருகிக்கிட்டே மாலை போட்டார்...கஸ்தூரி கவலைப்பட்டுக்கிட்டே பூத்தூவினார்...மது மனசில்லாம மரியாதையா வரவேற்றார்...லாஸ்லியா மனசுக்குள்ள அழுதுக்கிட்டே சிரிச்சார்...அபி ஆத்தாடி வந்துட்டாளேன்னு சத்தமில்லாம சொல்லிக்கிட்டு அழுதுக்கிட்டே அரவணைத்தார்.ஷெரின் யோசனையோடு வாரி அணைத்துக் கொண்டார்.தர்ஷன் தர்ம சங்கட்டமாக சிரித்தான்.கவினும் சாண்டியும் அக்கா வந்துட்டாங்கன்னு ஆனந்தப்பட்டது போலிருந்தது.அக்காவுக்கு டபுள் பேமண்ட் போல... கஸ்தூரி செய்யாததை நீ செய்யின்னு அனுப்பிட்டாரு போல.எல்லாரையும் உக்கார வச்சி... வச்சி வச்சிச் செய்யிது வனிதாக்கா... தர்ஷனும் லாஸூம் மட்டுமே தறுக்குன்னு ஒரு நாள் மிதிப்பாங்கன்னு தோணுது... சேரனெல்லாம் சேத்துக்குள்ள மாட்டுன செனத்தவளை மாதிரி உக்காந்திருக்கார்.பள்ளியில் படிக்கும் போது விருது பெற்ற படம்ன்னு தூர்தர்சன்ல ஞாயிறு மதியவேளையில் போடுவானுங்க... ரெண்டு மூணு பேரு உக்கார்ந்து பேசிக்கிட்டே இருப்பாங்க... அப்படித்தான் அக்கா பேசிக்கிட்டே இருந்துச்சு...நமக்கு பிக்பாஸ் பார்க்கிறோமா இல்லை மெகா சீரியல் நாடகம் பார்க்கிறோமான்னு நமக்குத் தோணுச்சு... அதுலதான் மாமியாக்காரி பட்டுப்புடவை கட்டிக்கிட்டு நகையெல்லாம் போட்டுக்கிட்டு சகுனி வேலையைச் சரியாப் பார்க்கும். அதைத்தான் அக்கா செய்யிது... தூங்கிப் போன பிக்பாஸை தூக்கி நிறுத்துறே... நடுத்தெருவுல நின்னு எங்கப்பன் என்ன செஞ்சான்னு சொன்ன மாதிரி என்னடா செஞ்சி வச்சிருக்கீங்கன்னு கேட்டு எல்லாப் பயலையும் அடிச்சிக்க விடணும் பர்னிச்சர் எல்லாம் உடையணும்ன்னு சொல்லி விட்டுட்டானுங்க போல... அடிச்சி ஆடுது.அபியையும் முகனையும் அடிக்க விட்டு முகனை வாரத்தின் பாதியிலேயே வெளியேற்றினா டிஆர்பி எகிறும்...கஸ்தூரியைக் காலை வாரி கக்கூஸ்ல விழுக வச்சா டிஆர்பி எகிறும்...கவின் - லாஸ்லியாவை கண்டபடி திட்டிக்க வைத்தால் டிஆர்பி எகிறும்...சேரனை 'போ'ரன்னு சொன்னா டிஆர்பி எகிறும்...மதுவை மல்லுக்கு இழுத்தால் டிஆர்பி எகிறும்...ஷெரின் தர்சனை பிச்சைக்காரப் புள்ளையளான்னு சொன்னா டிஆர்பி எகிறும்...சாண்டியை பூண்டி ஆக்கினால் டிஆர்பி எகிறும்...என எல்லாம் சொல்லிவிட்டிருப்பார் போல... அக்கா முக்காமணி நேரமாக் கிளாஸ் எடுக்குது... இன்னைக்கு கண்டிப்பாக அடிச்சிக்கிட்டு நாறிடுவானுங்க...வனிதாவுக்கு ஒரு ட்ரிபுள் பேமண்டைப் போடுன்னு பிக்பாஸ் இந்நேரம் சொல்லியிருப்பார்.ஒரு சில ஜென்மங்கள் எப்பவும் இப்படித்தான்... இதெல்லாம் திருந்தாது... இது இருக்கிற இடம் மட்டுமில்லை... போற இடமும் வெளங்காது... அப்படி ஒரு ஆள்தான் வனிதாக்கா.பிக்பாஸ் தொடரும்

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (14-Aug-19, 1:20 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 17

மேலே