ஜெயலலிதா அம்மா

புரட்சிகரமான உரை நிகழ்த்தி
பல உறுதி மொழி தான் உரைத்து
இரக்கமான சொற்களை சிறக்கப் பேசும்
ஈரமான இதழ்கள் வறட்சியோடு
அமைதியானது கண்டு என்
இரு விழி நீர் கசிந்தது -அன்று. !


புரட்சித் தலைவரின் பாதையைத் தொடர்ந்து
புரட்சித் தலைவி என்று பெயரும் பெற்று
புரட்சி கரமான ஆட்சி நடத்தி
புரட்சித் தலைவரின் அருகே நிரந்தர
உறக்கத்துக்குத் தயாராகி
மக்கள் திரளை இமை திறந்து
நோக்காத வாறு மூடிய விழி கண்டு
கலங்கி நின்றேன் நான் -அன்று. !


பல கோரிக்கைளுக்கு செவி சாய்த்து
பெண்களுக்கு முன் உரிமை அளித்து
சீண்டுவோருக்கும் சாந்தமாக பதில் கொடுத்து
சாதித்த சாதனைப் பெண் அசையாத வாறு
பெட்டிக்குள் அடைக்களம் ஆனது கண்டு
கலங்கி நின்றேன் நான் -அன்று. !

செல்வியாக வாழ்ந்து
சொல்லில் அடங்காச் சாதனை புரிந்து
சிறைவாசமும் தான் கண்டு
அஞ்சா நெஞ்சம் கொண்டு
வலம் வந்த பெண் சிங்கம் ஒன்று
பஞ்சபூதங்களின் ஒன்றான
பூமாதேவியோடு அக்கியமனது -அன்று. !

வஞ்சம் கொண்டோரும்
அஞ்சலி செலுத்திச் செல்ல.
லட்சம் விழி நீர் பாதை கழுவ
வங்கக் கடல் ஓசையோடு
மக்கள் குரல் ஓசை கலக்க
கன்னித் தாய் அவளின் இறுதி
வழி இவை என்று குழிக்குள் நுழையும்
காட்சி கண்டு கலங்கியது நெஞ்சம் -அன்று. !

மக்கள் திலகம் அவர்களின் மரணத்துக்குப் பின்
மக்கள் கூட்டம் கூடி வழி அனுப்பிய ஒரே மரணம்
புரட்சித் தலைவியின் இறுதிப் பயணம்
எந்த வாகனத்தில் இருந்து
இழுத்து எறியப்பட்டாரோ
அதே வாகன ஊர்வலம்
அரசு மரியாதையோடு இதுக்கு மேல்
தேவையோ அம்மா உன் சாதனையை கூறவே
என்று துயரத்திலும் பிரமித்தேன் நான் -அன்று.

சென்றதோ உன் உயிர் தான்
மறைக்கப்பட்டது உமது உடல் தான் மறையாது அழியாது உன் பெயர் அம்மா
அன்றும் இன்றும் என்றும் என்று உச்சரித்தது என் நாவும் மெதுவாக. -அன்று.!

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Aug-19, 1:23 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 68

மேலே