பாடலாக ஓர் கவிதை

கூவுற குயிலும் தேடுது பாட்டு
அதில் உன் பெயரை சேர்த்து
என் ராசா அதை நீ மறுத்திடலாமா
என் சோகத்தை வளர்த்திடலாமா
என் ராசா நீ மறுத்திடலாமா.

என் மனசும் உன் நினைவில்
பல ராகம் சொல்லி சொல்லி
இசை போட்டு தோல்வி கண்டு
துடிக்குதே என் ராசா இதை நீ
ஏற்றுக்க மறுத்திடலாமா
என்னை வெறுத்திடலாமா.

இரவு வேளையில் நடு சாமத்திலே
கனவில் உன் முகம் வந்து ஆசை
கூட்டுது இதை நான் கூற வரும்
நேரத்தில் நீ செவி கொடுக்காது
மறுத்திடலாமா என் ராசா
வெறுத்திடலாமா.

நீ பச்சரிசி நான் அச்சு வெல்லம்
நாம் சேர்ந்தால் தான் அதிரசம்
புரிஞ்சுக்கோ ராசா கொஞ்சம்
புரிஞ்சுக்கோ ராசா நான்
சொல்ல வரும் போது நீ வெறுக்கலாமா
என் ராசா மறுக்கலாமா.jQuery17102854305318636654_1565788990074??

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Aug-19, 6:52 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 99

மேலே