உணர்வது உன்னதமாய்

அரசு சொத்தை அரவணைப்போம்
அரணாய் நாமும் காத்திடுவோம்
இந்திய அரசாய் இருந்திடுவோம்
இல்லை துயர் இனி என்றிடுவோம்

இமயம் நமது வட எல்லை என்போம்
இந்தியப் பெருங்கடல் தென் எல்லை என்போம்
வங்காள விரிகுடா கிழக்கெல்லை என்போம்
அழகு அரபிக் கடல் மேற்கெல்லை என்போம்

வானம் அளவுக்கு வளர்ச்சியடைவோம்
வளங்கள் அனைத்தையும் பெருக்கிடுவோம்
பழம்பெரும் மாநில பெருமைகளை
பாங்குடன் போற்றி பகிர்ந்து கொள்வோம்

எல்லோரும் சமம் என புது சட்டம் செய்வோம்
எந்நிலையில் துயர் வந்தாலும் களைந்திடுவோம்
ஏழை எனும் நிலையை அழித்திடுவோம்
ஏச்சிப் பிழைப்போரை மாற்றிடுவோம்

பருவ மழை நீரை சேமிப்போம் - பலருக்கு
பகுத்துக் கொடுத்துப் அதனால் பெருமை கொள்வோம்
உணவை உருவாக்கும் திரு கூட்ட
உழைப்பைப் போற்றி உயர்வு கொள்வோம்

கனிம வளத்தினைக் காற்றைப் போன்றே
கருதியே கட்டமைப்பால் உறுதி செய்வோம்
கடமை உரிமைகளை இனம் காண்போம்
கருத்துள்ள சட்டத்தின்பால் கட்டுபடுவோம்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (14-Aug-19, 7:48 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 72

மேலே