தனித்துவமான

தவிக்காதே மனமே நீ தவிக்காதே எந்நொடியும்
தனியாக உள்ளதாக நினைக்காதே எந்நொடியும்
உன்னோடு துணையாக உள்ளது கரமிரண்டு
உன் வேகத்திற்கு ஈடேற்ற இயங்கும் காலிரண்டு
உன்னை வழிநடத்த திறமான கண்ணிரண்டு

மண்ணாக போகுமனிதன் மாண்பில்லா வார்த்தைக்கு
மகத்தான பொருள் கொடுத்து சோம்பி நிற்காதே
மடமையால் பொலிவிழந்து மங்கிக் குன்றாதே
மடை கடக்கும் வெள்ளம் போல் மாறாமல் ஓடியேயிரு
மாறுகின்ற மனித இனம் உன் மகத்துவத்தின் பின்வரும்

சிந்தனையை நேர்படுத்து செயலைத் துரிதமாக்கு
சிறிது களைப்பு வரும் போதே சீர்த்துக்கிக் களைச்செய்
அரிதினும் அரிதான ஆழ்மனதின் அக ஆற்றல்
அதனை அதிகப்படுத்து அதன் வழிச் செல்லத்துணி
அறிவியல் முறையிலே ஆன்மீகத்தை ஏற்றுக் கொள்

பகல்வரும் கதிர்போலே பலன்பாராது பணி செய்
பலகலைக் கற்றுக் கொண்டு பல பேருக்கு பலன்கொடு
பருவத்தில் பயிர் செய்வது பயங்கொண்டோர் வழக்கு
பயிருக்கேற்ற பருவம் அமைப்பது பல் கலைஞர் சிறப்பு
பாபம் என்று தெரிந்துவிட்டால் பல நன்மையாயின் விலகு.
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (16-Aug-19, 10:42 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 53

மேலே